Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினை திட்டுவதை அண்ணாமலை விட்டுவிட வேண்டும்.. மேடையில் பங்கமாய் கலாய்த்த ராதாரவி..

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது  தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

Annamalai should stop insulting Stalin.,, Radha ravi demand.
Author
Chennai, First Published Jul 5, 2022, 7:41 PM IST

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது  தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போரட்டம் நடந்தது. அதில் அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் கலந்துகொண்ட ராதாரவி திமுக அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார்.

Annamalai should stop insulting Stalin.,, Radha ravi demand.

இதையும் படியுங்கள்: "திமுககாரன் என்றாலே சூடு சுரணை இருக்காது"... கமலாயத்தின் கதவை தட்டுவார்கள்.. வினோஜ் பி செல்வம் பேச்சு.

அவர் பேசிய கருத்துக்கள் வழக்கம்போல சர்ச்சைக்குரியவைகாளவே இருந்தன. அவரது பேச்சின் விவரம் பின்வருமாறு:-  அண்ணாமலையை தமிழக அமைச்சர்கள் வாடா போடா என பேசி வருகின்றனர். அவர்கள் அப்படி பேசினால் பாஜகவினர் யாரும் வருத்தப்பட தேவையில்லை, கடவுள் முருகனையே டேய் முருகா.. என்று தான் அழைக்கிறார்கள். அப்படி என்றால் அண்ணாமலையும் கடவுளாக நினைத்து தான் அவர்கள் அப்படி பேசுகிறார்கள். அண்ணாமலையை அப்படி பேசவில்லை என்றால் அவர்களுடைய அமைச்சர் பதவி நிலைக்காது.

இதையும் படியுங்கள்:   நுபுர் சர்மா மீதான உச்ச நீதி மன்றத்தின் கருத்துக்கு எதிராக 15 முன்னாள் நீதிபதிகள் கொந்தளிப்பு.. பகீர் கடிதம்.

நான் பல தலைவர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் அண்ணாமலையை போல பேச்சுத் திறமை யாருக்கும் இல்லை, பாஜக விற்கு ஐந்து கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு வந்தேன் என்று சொல்லுகிறார்கள்,ஆனால் தேய்த்து தேய்த்து பார்த்தும் எதுவும் தேரவில்லை, அண்ணாமலையை வளர்த்து விட்டதே திமுக தான். பழைய அண்ணாமலையாக அவர்  மாறினால் நீங்கள் என்ன ஆவீர்கள். பாஷை தெரியாத கர்நாடகாவிலேயே கம்புவிட்டு ஆட்டினார். எனக்கு ஆர்டராக பேசிப் பழக்கமில்லை என் குடும்பத்துக்கே பழக்கமில்லை, சகட்டுமேனிக்கு பேசி தான் பழக்கம். 

Annamalai should stop insulting Stalin.,, Radha ravi demand.

அண்ணாமலை பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார், தமிழ்நாட்டில் சிங்கம் அண்ணாமலை தான், அண்ணாமலை தான் அடுத்த முதலமைச்சர் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். தனது பேச்சாலே பத்திரிக்கைகளை தன் பக்கம் திருப்பியவர் அண்ணாமலை. பாஜக பணம் தந்து கூட்டம் சேர்ப்பதில்லை, குவாட்டர் பிரியாணி தந்து வளர்ந்த கட்சி அல்ல பாஜக, தயிர் சாதம் சாப்பிட்டு வளர்ந்த கட்சி. எனக்கு ஸ்டாலினை மிகவும் பிடிக்கும் அவர் நல்ல மனிதர் தான் ஆனால் அவருடன் இருக்கும் ஆட்கள் தான் சரி இல்லை.

ஸ்டாலினை திட்டுவதை அண்ணாமலை விட்டுவிட வேண்டும், ஸ்டாலின் ஊழல் செய்ய மாட்டார் ஐந்து லட்சம் கோடிக்கு சொந்தக்காரர் ஸ்டாலின் என பேசிய ராதாரவி ஆர்.சி (ரோமன் கத்தோலிக்) நல்லவர்கள்.. சிஎஸ்ஐ கொஞ்சம் பரவாயில்லை, பெந்தகோஸ்தே ஆபத்தானவர்கள். வரும் தேர்தலில் BJP vs DMK தான். கருணாநிதி போல தற்போது பத்திரிகைகளில் அண்ணாமலையில் பெயர் வந்து கொண்டே இருக்கிறது இவ்வாறு அவர் பேசினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios