அண்ணாமலை தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாகவும் பதிலளித்துள்ள அந்நிறுவனம் தங்களது சேமிப்பு தொகை 38 கோடி மட்டுமே என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு, கடந்த ஆண்டில் மட்டும் ரூபாய் 467 கோடி வருவாய் ஈட்டி இருப்பதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கோபாலபுரத்திற்கும் தங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என பிஜிஆர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மின்வாரிய ஒப்பந்த பணிகளை பெற்றது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் புகார் தெரிவித்து வந்த நிலையில் பிஜிஎம் நிறுவனம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அக்கட்சிக்கும்-பாஜகவுக்கும் இடையே மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக மீது முன்வைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அவர் அடுக்கடுக்கான புகார்களை கூறி வருகிறார். அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்தித்த அவர், தமிழக மின் துறையில் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினார். அதாவது எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்காக ரூபாய் 355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு முறைகேடாக ரூபாய் 4422 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது என குற்றம் சாட்டினார்.

இப்படி ஊழல் செய்வதுதான் திராவிட மாடல், இந்த முறைகேடுகளை முழுமையாக வெளிக் கொண்டுவர பாஜக போராடும் என்றார். அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி இது ஒப்பந்தம் கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த 2009இல் போடப்பட்டது. அடிப்படை ஆதாரமின்றி அண்ணாமலை குற்றம் சாட்டி வருகிறார். இந்த குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையென்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, என் மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருக்கிறார், தயவு செய்து என் மீது நடவடிக்கை எடுங்கள். மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தாலும் சரி, காவல்துறையை பயன்படுத்தி கைது செய்தாலும் சரி எதற்கும் நான் தயாராக இருக்கிறேன் என சவால் விடுத்தார்.
ஊழல் செய்த பணத்தை முதலீடு செய்வதற்காகத்தான் நமது அரசியல்வாதிகள் அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்கின்றனர் என்ற அவர் அங்கிருந்து போலி நிறுவனங்கள் மூலம் அவர்கள் அந்த பணத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக நேர்மையாக விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்தினார். இதேபோல ஆவின் நிறுவனம், போக்குவரத்து துறை என பல முறைகேடுகள் நடந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தற்போது இந்த குற்றச்சாட்டு அதிமுக பாஜக இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புகாருக்குள்ளான பிஜிஆர் நிறுவனம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- கோபாலபுரத்திற்கும் எங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

பிஜிஆர் நிறுவனம் ஒரு பேப்பர் கம்பெனி என அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில் தங்கள் நிறுவனம் மூலம் நேரடியாக 1400 வேலையாட்களும், மறைமுகமாக 2000க்கும் அதிகமானோர் பயன் பெறுவதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தாமதமாக செயல்பட்டு அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய நிறுவனம் என அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு, இதுவரை எந்த பணியையும் காலதாமதமாக பிஜிஆர் செய்யவில்லை எனவும் அந்நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது. அண்ணாமலை தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாகவும் பதிலளித்துள்ள அந்நிறுவனம் தங்களது சேமிப்பு தொகை 38 கோடி மட்டுமே என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு, கடந்த ஆண்டில் மட்டும் ரூபாய் 467 கோடி வருவாய் ஈட்டி இருப்பதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மார்ச் 2020 2021-ன் படி ரூபாய் 5 ஆயிரத்து 296 கோடி சொத்து இருப்பதாகவும் கூறியுள்ளது. கோபாலபுரத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே பிஜிஆர் நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு கோபாலபுரத்தில் வசிக்கும் எந்த குடும்பத்திற்கும் எந்த எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதேபோல் 2006- 2011ல் மின்வெட்டு ஏற்பட்டதற்கு பிஜிஆர் நிறுவனம்தான் காரணம் என அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், பிஜிஆர் நிறுவனம் சார்பில் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவது மட்டுமே தங்களின் பணி எனவும், மின்சார வினியோகம் செய்வதில்லை எனவும் அந்நிறுவனம் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளது.
