Asianet News TamilAsianet News Tamil

கோவை டிஐஜி தற்கொலையை எளிதாகக் கடந்து செல்ல முடியாது.! பின்னனி என்ன.? விசாரணை நடத்திடுக- அண்ணாமலை

கோவை டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். 

Annamalai request to investigate the suicide of DIG Vijayakumar
Author
First Published Jul 7, 2023, 10:40 AM IST

 2009ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று விஜயகுமார் காவல்துறை பணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்தவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கோவை சரக காவல்துறை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் இன்று காலை நடைபயிற்சி முடித்துவிட்டு கோவையில் உள்ள முகாம் அலுவகம் வந்தவர் பாதுகாவலர் ரவி என்பவருடைய துப்பாக்கியை வாங்கி சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Annamalai request to investigate the suicide of DIG Vijayakumar

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக தகவல் வெளியானது. இந்தநிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், கோவை சரக டிஐஜி திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது?

 

காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் ஸ்டாலின்  எடுத்த நடவடிக்கைகள் என்ன?  காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க  தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios