கோவை சிலிண்டர் வெடிப்புக்கு முன் முபின் வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ..? அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்
என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிராத்தனை செய்யுங்கள் என கூறியுள்ளார். இது ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் நபர்கள் அனைவரும் கூறும் வாசகங்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை சிலிண்டர் வெடிப்பு
கோவையில் நேற்று முன்தினம் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவம் சதி செயல் காரணம் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடி விபத்து தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை மூடி மறைப்பதற்காக காவல்துறையினர் சிலிண்டர் வெடிப்பு என கூறி வருவதாக குற்றம்சாட்டினார். குண்டுவெடிப்பில் பலியான ஜமேசா முபின் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக செல்போன் ஸ்டேட்டஸில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை வைத்திருந்ததாக கூறினார். முபின் வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிராத்தனை செய்யுங்கள் என கூறியுள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு
இது ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் நபர்கள் அனைவரும் கூறும் வாசகங்கள் தான் இது என தெரிவித்தார். எனவே அதன் அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இறப்பதற்கு முன்பு முபின் வீட்டில் இருந்து சிலிண்டரை 5 பேர் கொண்டு செல்வது போன்ற காட்சி வெளியானது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எட்டு பேர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உளவுத்துறை அதிகாரிகள் இந்த சம்பவத்தை கோட்டை விட்டது எப்படி என கேள்வி எழுப்பினார். மேலும் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் அமைச்சர் ஆய்வு கூட்டம் நடத்தினாரா என கேள்வி எழுப்பினார்.
வீட்டில் இருந்து கோலி குண்டுகளோடு சென்ற முபின் எதற்காக சென்றார் என இதுவரை கூறவில்லையென தெரிவித்தவர், முதலமைச்சரோடு கோலி குண்டு விளையாடவா சென்றார் என்ற அவேசமாக கூறினார். கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் கடந்த மூன்று மாதங்களாக சதி செயல்கள் நடைபெற்று வந்ததாக குற்றம் சாட்டிய அவர் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்