வட மாநிலத்தவர்கள் மீது வெறுப்பை கக்கும் 15 பேரின் பட்டியல் ரெடி.! நடவடிக்கை எடுக்க தயாரா.? அண்ணாமலை கேள்வி

வடமாநில தொழிலாளர்கள் மீது வெறுப்பை கக்கும் திமுக அமைச்சர்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்களின் 15 பேரின் பட்டியல் தருகிறேன். அவர்கள் மீது  முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி 

Annamalai has questioned whether the Chief Minister is ready to take action against those who abused the people of the northern state

தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்.?

தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 12 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக வட இந்தியாவிலிருந்து வெளியாகும் பிரதான செய்தி நிறுவனங்களே போலிச் செய்திகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளரும் இந்த தகவலை வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பீகார், ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அச்சமடைந்து தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது. இந்த தகவல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்பட்ட நிலையில், பீகாரை சேர்ந்த அதிகாரிகள் குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

சிடிஆர் நிர்மல் குமாருக்கு புது "ஆப்பு".. நேற்று ராஜினாமா.! இன்னைக்கு இப்படியா.? அண்ணாமலையின் பக்கா ஸ்கெட்ச்!

Annamalai has questioned whether the Chief Minister is ready to take action against those who abused the people of the northern state

தமிழக அரசு எச்சரிக்கை

இந்தநிலையில் பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பொய் செய்திகளை யார் பரப்பினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் பொய் செய்திகளை பரப்பியவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில்  நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக அமைச்சர் பொன்முடி, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோர் வட மாநில தொழிலாளர்களை அவமான படுத்தும் நோக்கில் பேசி வருவதாக அண்ணாமலை நேற்று கூறியிருந்தார்.

Annamalai has questioned whether the Chief Minister is ready to take action against those who abused the people of the northern state

15 பேரின் பட்டியலை தர தயார்

இதனையடுத்து இன்று அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி தெரியாது போடா என முதல்வரின் மகன் டிஷர்ட் கலாசாரத்தை, தொடங்கி வைக்க, விமான நிலையத்தில் என்னிடம் இந்தியில் பேசினார்கள் என முதல்வரின் தங்கை, திமுகவின் எம்.பி பொய்யான புகாரை வழங்க வடமாநிலத்தவருக்கு எதிரான வன்மத்தை தொடங்கிவைத்தனர். 

 

மேலும் வடமாநில தொழிலாளர்கள் மீது வெறுப்பை கக்கும் திமுக அமைச்சர்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்களின் 15 பேரின் பட்டியல் தருகிறேன் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்..! அண்ணாமலை மீது 4 பிரிவில் வழக்கு.! அதிரடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios