Asianet News TamilAsianet News Tamil

களத்தில் இறங்கிய பாஜக... எச்.ராஜா தலைமையில் தேர்தல் அறிக்கை குழு.. 38 குழுக்களின் பட்டியலும் வெளியீடு

நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்க உள்ள நிலையில், அதிமுக, திமுக குழுக்களை அமைத்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், பாஜகவும் 38 குழுக்களை அமைத்துள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கை குழு தலைவராக எச்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

Annamalai has announced 38 committees including a committee to prepare election manifesto on behalf of BJP KAK
Author
First Published Feb 5, 2024, 1:42 PM IST

தேர்தல் பணியை தொடங்கிய பாஜக

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேர்தல் பணிகளை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை பாஜக இலக்காக நிர்ணயித்துள்ளது. அந்த வகையில் தமிழக்தில் 25 இடங்களை கைப்பற்ற வேண்டும் என பாஜக மாநில தலைமை அறிவித்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தொகுதி பங்கீட்டு குழு, ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்தது. அந்த குழுவும் ஆலோசனையை தொடங்கியுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பொதமக்களின் கருத்துகளை கேட்க சுற்றுப்பயணத்தையும் அறிவித்து விட்டது.

Annamalai has announced 38 committees including a committee to prepare election manifesto on behalf of BJP KAK

எச்.ராஜா தலைமையில் தேர்தல் அறிக்கை குழு

ஆனால் பாஜக சார்பாக தேர்தல் பணிகள் தமிழகத்தில் தொடங்கவில்லையென கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பாஜக சார்பாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிக்க ஹெச்.ராஜா தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன், ராம சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  

 

இதே போல  பா.ஜ.க. தேர்தல் பிரச்சார உரை தயாரிக்க தனி குழுவும் உரையை அச்சிட தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரச்சாரக்குழு, இளைஞர் பிரச்சாரக்குழு, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரச்சாரக் குழு என 38 குழுக்களை அமைத்து அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

கொங்கு மண்டலத்துக்கு வேட்பாளர்களை தேர்வு செய்த பாஜக? அமைச்சர் சீட் கன்ஃபார்ம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios