ஆளுநரின் அதிகாரத்தில் ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாடு.! பழைய டுவிட்டரை தூசி தட்டி அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை

அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய கவர்னருக்கு பரிந்துரைத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது அமைச்சரை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்கிறார். இது முதலமைச்சரின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக தெரிவித்துள்ளார். 

Annamalai has accused the Chief Minister of being in a double entendre on the matter of Governor power

செந்தில் பாலாஜியும் அமைச்சர் பதவியும்

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் அமைச்சராக இருந்த போது மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் ரவி வலியுறுத்தி இருந்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த முதலமைச்சர் ஸ்டாலின் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்தார்.

மேலும்  ஆளுநருக்கு அமைச்சரை நீக்க எந்த அதிகாரமும் இல்லையென தெரிவித்தார். இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், ஊழல் புகாரில் அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை முதலமைச்சர் நீக்க வேண்டும்.

Annamalai has accused the Chief Minister of being in a double entendre on the matter of Governor power

விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்திடுக

இல்லையென்றால் ஆளுநர் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பதிவு செய்துள்ளார். அந்த பதிவை அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துளார். அதில்,  தன் மீதும் ஊழல் வழக்குகள் இருப்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், குட்கா புகழ் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யத் தயங்கினால், மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக அமைச்சர் விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்! அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளுநர், இப்படி ஊழல்பற்றி பொதுமேடைகளில் பேசுவது எவ்வித பலனையும் கொடுக்காது! ஊழலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்வதோடு, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஆட்சி நடத்திவரும் முதல்வர் - துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

 

ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாடு

இந்த பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள அண்ணாமலை, அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கரை நீக்கம் செய்ய கவர்னருக்கு பரிந்துரைத்தார் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது அமைச்சரை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்கிறார். இது கவர்னர் அதிகாரத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது என அண்ணாமலை கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்
தமிழக அரசுடன் உச்சகட்ட மோதலில் ஆர்.என்.ரவி..! ஆளுநர் வழுக்கிய பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios