Asianet News TamilAsianet News Tamil

செந்தில் பாலாஜி ஒரு உத்தமரா? மாநிலத்தை காக்க வந்த சேவகரா.?குடியரசு தலைவருக்கு ஸ்டாலின் கடிதம்- சீறும் அண்ணாமலை

திமுக அரசு கொடுப்பதை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லையென தெரிவித்த அண்ணாமலை  ஆளுநர் அப்படி  படிக்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டத்தை சொல்லி இருக்க வேண்டும் என கூறினார். 

Annamalai has accused that the Governor is not respected in Tamil Nadu
Author
First Published Jul 10, 2023, 10:28 AM IST

ஸ்டாலின் சுய பரிசோதனை செய்யனும்

தமிழக ஆளுநர் மீது புகார் தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஆளுநர் பதவிக்கு ஆர் என் ரவி தகுதியற்றவர் என விமர்சனர் செய்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின்  கண்ணாடியில் தன்னை  சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாத பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆளுநர் தான் காரணம் என அவரது கடிதம் இருப்பதாக கூறினார்.  தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது, திமுக செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கிறது.

செந்தில் பாலாஜி ஒரு உத்தமரா?

நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.  இவற்றை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப் பார்க்கின்றனர்.  தமிழக ஆளுநர்,  அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியது தவறு என்று சொல்கின்றனர். அந்த விஷயத்மை விவாதிக்க நேரம் இருக்கிறது. அதே வேளையில் எதற்காக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ஆளுநரிடம் அமைச்சர்களை  நீக்க வேண்டும் என ஏன் வலியுறுத்தினார்? செந்தில் பாலாஜி ஒரு உத்தமராகவும், மாநிலத்தை காக்க வந்த சேவகாராகும் விதமாக அந்த கடிதம் அனுப்பி இருக்கின்றனர். தன்னுடைய கட்சி செய்யக்கூடிய தவறுகளை மறைக்க ஆளுநர் மீது குற்றசாட்டுகளை கூறுவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?

ஆளுநரின் மாண்புக்கு மரியாதை இல்லை

கள்ளச்சாராய சாவு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என ஏராளமான பிரச்சினைகள்  இருக்கும்பொழுது ஆளுநர் மீது அனைத்து பழிகளும் போடப்படுகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுக  எம்பி, எம்.எல்.ஏ ஆளுநரின் மாண்புக்கு உரிய வகையில் அவரை பேசுவதே இல்லை.இவர்கள் கொடுப்பதை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை. ஆளுநர் அப்படி  படிக்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டத்தை சொல்லி இருக்க வேண்டும்.  எங்கெல்லாம் பொய் இருக்கிறதோ அதையெல்லாம் ஆளுநர் படிக்காமல் இருந்திருக்கின்றார்.

சிதம்பரம் கோயில் விவகாரம்

திமுக சொல்லுவதை எல்லாம் ஆளுநர் சொல்ல முடியாது. இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநரிடம் என்ன சொன்னார்கள். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. முதல்வரின் கடிதத்தில் அவரது இயலாமை தான் வெளிப்படுகிறது. சிதம்பரம் குழந்தைகள் விவகாரத்தில் ஆளுநர் மீது எப்படி வழக்கு செய்ய முடியும்? தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரித்து ஒரு அறிக்கை என்று கொடுத்து இருக்கிறது. அவர்கள் சொல்வது தவறா? காவல்துறை சொல்வது தவறா? என்பதுதான் விவாதமே தவிர ஆளுநர் எப்படி இதற்கு பொறுப்பாவார்.

ஜி.யு.போப் ஆளுநர் சொந்த கருத்து

ஆளுநருக்கு ஜி யு போப் திருக்குறளை மொழி மாற்றம் செய்ததில் மாறுபட்ட கருத்து இருக்கிறது. ஜி.யு.போப் திருக்குறளை மொழி பெயர்த்ததில் சில இடங்களில் தவறு இருக்கிறது. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். ஆனால் ஜி யு போப் குறித்து சொந்த கருத்தை ஆளுநர் சொல்லி இருக்கின்றார். கலாச்சாரத்தைப் பற்றி, பண்பாட்டை பற்றி ஆளுநருக்கு பேச உரிமை இருக்கிறது. முதல்வர் எழுதிய  கடிதம் முன்னுக்கு  பின் முரணாக இருக்கிறது. தோல்வி பயத்தைக் காட்டும் விதமாகவே அவரது  கடிதம் இருக்கிறது. தமிழகத்தின் உண்மையான நிலையை பிரதிபலிக்கும் விதமாக முதல்வரின் கடிதம் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

மு.க.அழகிரியோடு ஸ்டாலின் சந்திப்பு.! நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் தயாநிதி அழகிரி போட்டியா.?

 

Follow Us:
Download App:
  • android
  • ios