Asianet News TamilAsianet News Tamil

கோவை கார் வெடிப்பு விவகாரம்... மு.க.ஸ்டாலினுக்கு ஐடியா கொடுத்த அண்ணாமலை!!

கோவை தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். 

annamalai gave ideas to prevent car explosions from happening again
Author
First Published Oct 26, 2022, 11:08 PM IST

கோவை தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற பரிந்துரைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், கோவை, உக்கடம் பகுதியில் 23-10-2022 அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: உங்களுக்கு இவ்வளவு நாக்கொழுப்பா? ராமர் பாலம் சர்ச்சை - கி.வீரமணிக்கு சவால் விட்ட பாஜக நாராயணன் திருப்பதி

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் முதலமைச்சர் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால் இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட மத்திய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவை தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டரில் பதிவில், தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை தமிழ்நாடு பாஜக வரவேற்கிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் Vs எடப்பாடி.. 2 பேருமே கிடையாது.! முத்துராமலிங்க தேவர் தங்க கவச வழக்கில் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு

(1) தேச விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குங்கள், (2) தமிழக காவல்துறையின் உளவுத்துறை உலக புகழ் பெற்றது. சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் தொடர் தோல்விகளுக்குப் பின்பு உளவுத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக முன்னெடுங்கள், (3) திமுகவினர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு காவல்துறையினரை பயன்படுத்தாமல், தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். நீங்கள் பதவி ஏற்கும் போது அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று அரசை நடத்துவீர்கள் என்ற உறுதிமொழியை அளித்தீர்கள். மேல் குறிப்பிட்ட ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம். தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு நீங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தமிழ்நாடு பாஜக உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios