பாஜகவில் 4 மடங்காக உயர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை.! தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்-அண்ணாமலை உறுதி
பாஜக பொருத்தவரை உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக சொல்ல முடியாது ஆனால் தற்பொழுது 4 மடங்காக உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக ஆண்டு விழா
பாரதிய ஜனதா கட்சியின் 43-வது ஆண்டு துவக்க விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவின் 43-வது ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இது சாதாரணமானது ஒன்று இல்லை, இது ஒரு வரலாறு. திரும்பி பார்க்கும் பொழுது எங்களுக்கு பிரமிப்பாக இருக்கிறது. கட்சியை துவங்கும் போது இரண்டு எம்பிக்கள் மட்டுமே பாஜகவிற்கு கிடைத்தது.
தமிழகத்தில் பாஜக ஆட்சி
நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் பேசும்போது காங்கிரஸ் எம்பிகள் தொடர்ந்து கேலியம்,கிண்டலும் செய்தார்கள். ஆனால் இன்று அந்த நிலை முற்றிலும் மாறி பாஜக 43 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கிய ஆண்டை விட குறுகிய காலத்தில் பாஜக அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. பாரத பிரதமர் பாஜகவின் இத்தகைய வளர்ச்சிக்கு தொண்டர்களின் உழைப்பு மட்டுமே முக்கிய காரணம் என்று கூறினார். அது முற்றிலும் உண்மைதான். தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். அதற்கு தொண்டர்கள் உழைப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் திமுக, அதிமுகவினர் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியுள்ளதாகவும், பாஜக எப்போது தங்களது உறுப்பினர் சேர்க்கை தொடங்கும் என கேள்வி கேட்கப்பட்டது .
4 மடங்கு அதிகரித்த உறுப்பினர்கள்
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, பாஜக பொருத்தவரை 365 நாட்களும் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கும் நாள் தான். அரசியலை பொறுத்தவரை சித்தாந்தமாக செயல்பட வேண்டும். எனவே பாஜக அனைத்து நாட்களிலும் உறுப்பினர் சேர்க்கையை ஏற்றுக் கொள்ளும் என தெரிவித்தார். பாஜக பொருத்தவரை உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக சொல்ல முடியாது ஆனால் தற்பொழுது 4 மடங்காக உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள டெண்டர் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், டெல்டா பகுதிகளை பொருத்தவரை தமிழ்நாட்டில் முக்கியமான ஒன்று. .
அமைச்சர்களின் ஊழல் பட்டியல்
நிலக்கரி சுரங்கம் தொடர்பாக தகவல் வந்தவுடனே அதை நாங்கள் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு திட்டத்தை மத்திய பாஜக அரசு இங்கு கொண்டு வராது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என தெரிவித்தார். ஏப்ரல் 14ஆம் தேதி அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட இருப்பதாக சொல்லியுள்ளேன். திமுகவின் இந்த ஆட்சி காலம் மட்டும் இல்லை, போன ஆட்சிக் காலத்தில் செய்த ஊழல்களையும் வெளியிட இருப்பதாக கூறினார். எனவே யாரும் எங்கேயும் தப்பித்துப் போக முடியாது என அண்ணாமலை கூறினார்.
இதையும் படியுங்கள்