கனிமொழி கூட்டத்தில் பெண் காவலருக்கு திமுக நிர்வாகி பாலியல் தொல்லை.!அதிகார மமதையின் வெளிப்பாடு -அண்ணாமலை ஆவேசம்
திமுக துனைப்பொதுச்செயலாளர் கனிமொழி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், குற்றசம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரையும் கைது செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை
பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துனைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் ஏகாம்பரம் மற்றும் பிரபு ஆகிய இருவரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து திமுக நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் சென்ற போது விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா தடுத்து நிறுத்தியதாகவும், திமுக நிர்வாகிகளை கைது செய்யக்கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது என்ன லவ் லெட்டரா? வாங்க மாட்டேன்னு திருப்பி அனுப்புவதற்கு? இபிஎஸ்ஐ வச்சு செய்யும் புகழேந்தி..!
தடுத்து நிறுத்திய திமுக எம்எல்ஏ.?
இந்த சம்பவம் காவல்துறையினர் மட்டுமில்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம்.
அண்ணாமலை கண்டனம்
மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய தமிழக முதலமைச்சர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்
தமிழகத்தை கைப்பற்ற செம பிளான் போட்ட பாஜக..!! நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் மோடி போட்டியா.?