Asianet News TamilAsianet News Tamil

என் மண், என் மக்கள் நடைபயணத்தை எங்கு நிறைவு செய்து இருக்காரு பாருங்க அண்ணாமலை..!

ஊழலுக்கு எதிராகவும், மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டார். 

Annamalai completed my En Mann En Makkal yatra tvk
Author
First Published Feb 27, 2024, 2:43 PM IST | Last Updated Feb 27, 2024, 2:48 PM IST

தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண், என் மக்கள் யாத்திரை இன்றுடன் நிறைவு பெற்றது. 

ஊழலுக்கு எதிராகவும், மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டார். அண்ணாமலையின் யாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.  இந்த பயணத்தின் போது தொகுதி வாரியாக அண்ணாமலைக்கு பாஜக, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணாமலை போகும் இடமெல்லாம் ஆளும் திமுக அரசின் ஊழல்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

இதையும் படிங்க: யார் அந்த முக்கிய புள்ளி.? பாஜகவில் இணையாததற்கு காரணம் என்ன.? அண்ணாமலை கூறிய பரபரப்பு விளக்கம்

Annamalai completed my En Mann En Makkal yatra tvk

தற்போது இந்த பயணம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 233வது தொகுதியாக திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடை பயணத்தை தொடங்கினார். 234வது தொகுதியான திருப்பூர் தெற்கில் உள்ள குமரன் சிலைக்கு மாலை அணிவித்து இந்த நடை பயணத்தை நிறைவு செய்தார். 

இதையும் படிங்க:  பாஜக எம்எல்ஏக்கள் 2 பேர் இன்று மதியம் அதிமுகவில் இணைகிறார்கள்..? அம்மன் அர்ஜூனன் தகவலால் பரபரப்பு

Annamalai completed my En Mann En Makkal yatra tvk

இதுதொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கடந்த 2023 ஜூலை மாதம், புண்ணிய பூமியான ராமேஸ்வரம் மண்ணில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களால் தொடங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் பயணம் செய்து, 234 ஆவது சட்டமன்றத் தொகுதியாக, இன்றைய தினம், திருப்பூர் தெற்கு தொகுதியில், சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் அவர்கள் நினைவிடத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி, நமது நமது என் மண் என் மக்கள் நடைபயணத்தினை நிறைவு செய்திருக்கிறோம்.

 

 

சுமார் 7 மாதங்களாக, தமிழகம் முழுவதும் மக்களோடு மக்களாகப் பயணித்ததில், தமிழக மக்கள் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள், ஊழலற்ற அரசியலை எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நேர்மையான நல்லாட்சி, தமிழகத்திலும்  அமையும் என்ற நம்பிக்கையை நம் தமிழக மக்கள் மனதில் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது என பதிவிட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios