டெல்லி தேர்தல்.!பாஜக வேட்பாளருக்காக களத்தில் இறங்கிய அண்ணாமலை.! தமிழர் வாழும் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு
டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
டெல்லி மாநகராட்சி தேர்தல்
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நடைபெறுகிறது. டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சவால் அளிக்கும் வகையில் உள்ளது. இந்தநிலையில் பாஜக வேட்பாளரை ஆதரித்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக பாஜக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக நிர்வாகி மற்றும் நடிகையுமான குஷ்பூ, தமிழர்கள் வசிக்கும் "ஜல் விஹார்" பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதே போல வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு பாஜகவிற்கு ஆதரவாக வாக்குளை சேகரித்தனர்.
அண்ணாமலை வாக்கு சேகரிப்பு
இந்தநிலையில் நேற்று டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமல், டெல்லி மாநகராட்சி தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் டெல்லியில் உள்ள தமிழர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள், இதனிடையே ஜல் விஹார் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஸ்ரீ அர்ஜூன் மார்வாப் ஆதரித்து அண்ணாமலை வாக்குகள் சேரித்தார். இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட அண்ணாமலை, கல்காஜியில் போட்டியிடும் யோகிதாசிங், ஆர்கே புரத்தில் போட்டியிடும் துளசி ஜோஷிகா மற்றும் கல்யாண்புரி வார்டில் போட்டியிடும் ராஜ் குமார் ஆகியோருக்கு வாக்கு சேரித்ததாக தெரிவித்தார்.
ஆம் ஆத்மி மக்களை கண்டுகொள்ளவில்லை
அப்போது டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி விளம்பரங்களில் கவனம் செலுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களை மறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றாத காரணத்தால் ஆம் ஆத்மி மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கூறினார்.
இதையும் படியுங்கள்