கேன்களில் கடத்தப்பட்ட 400 கிலோ வெள்ளை நிறத்திலான பவுடர்.! சிக்கியது வெடி மருந்தா.? கடலோர காவல்படை விளக்கம்
கோவை கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், தண்ணீர் கேன்களில் மறைத்து கடத்தப்பட்ட 394 கிலோ வெள்ளை நிற பவுடர் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேன்களில் வெள்ளை நிற பவுடர்
கோவை மற்றும் மங்களூர் அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை அருகே போலீசார் சோதனையில் இரண்டு நபர்கள் தண்ணீர் கேன்களில் வெள்ளை நிற பவுடர் கொண்டு சென்ற நிலையில் போலீசார் பிடித்தனர். இந்த வெள்ளை நிற பவுடர் தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்து என தகவல் பரவியது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் கடலோர காவல்படை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
சிக்கியது வெடி மருந்தா..?கடந்த 28.11.2022 இரவு 08.00 மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த TN-57-AA-0077 என்ற பதிவு எண் கொண்ட பஜீரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அவ்வாகனத்தில் கீழக்கரை சங்குளிகாரத்தெருவை சேர்ந்த (1) சர்பராஸ் நவாஸ் (42/2022) த/பெ. சம்சுதீன் மற்றும் (2) ஜெய்னுதீன் (45/2022) த/பெ. சம்சுதீன் ஆகியோர் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்களில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற பவுடர் (394 கிலோ) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி நபர்கள் சந்தேகத்திற்கிடமான பொருளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் இருந்ததால் அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும மண்டபம் கடற்காவல் நிலைய உதவி ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டார்கள்.
கோவில்களின் மரபை சிதைக்க முயற்சி... திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!!
கடலோர காவல் படை விளக்கம்
மேலும் அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதை பொருளோ அல்லது வெடிமருந்தோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.மேற்படி நபர்கள் விவசாய உரத்தினை மிகஅதிக பணமதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்பவிருந்தது தெரிய வந்தது. இருப்பினும் இந்தச்செயல் சுங்கத்துறை சட்ட மீறலின்கீழ் வருவதால் மேற்படி இரு நபர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் சட்டப்படி உரிய மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டதாக கடலோர பாதுகாப்பு குழும்ம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் இது தான் நடக்கும்.. பங்கமாய் கலாய்க்கும் டிடிவி.தினகரன்..!