அண்ணாமலை- உதயநிதி திடீர் சந்திப்பு..! என்ன பேசினார்கள் என தெரியுமா..?
திமுக பாஜக இடையே கடும் வார்த்தை போல் நடைபெற்று வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின்- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துக் கொண்டு நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திமுக-பாஜக மோதல்
தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்பு 14 மாதங்கள் முடிவடைந்த நிலையில் நாள்தோறும் திமுக-பாஜக இடையே வார்த்தை போர் அதிகரித்துக் கொண்டு வருகிறது.. மின்வாரியத்தில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு, முதலமைச்சர் துபாய் பயணத்தில் குடும்பத்தோடு சுற்றுலா, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கியதில் டெண்டர் முறைகேடு, ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சாதகமாக தமிழக அரசு செயல்பாடு என ஒன்றன்பின் ஒன்றாக திமுக அரசு மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது அதிமுக ஆட்சி காலத்தின் பொழுது அமைச்சர்களிடம் பாஜகவினர் பணம் பெற்றதாகவும் புகார் கூறியிருந்தது. மேலும் கர்நாடகாவில் ஆட்சி கலைக்க பாஜகவிற்கு அதிமுக பணம் கொடுத்ததாகவும், திமுக கூறியிருந்தனர். மேலும் அதிமுக அமைச்சர்களிடம் இருந்து பணம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டை பாஜக மறுக்க முடியுமா என்றும் திமுகவினர் சவால் விடுத்திருந்தனர். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 630 கோடி ரூபாய்க்கு நஷ்டஈடு வழக்கும் தொடர்ந்து இருந்தனர்.
திமுக மீது புகார்
இதுபோன்று திமுக-பாஜக கடும் வார்த்தை போர் நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்று முடிந்து வீடு திரும்பும் போது தவறுதலாக உதயநிதி ஸ்டாலின் காரில் எடப்பாடி பழனிச்சாமி ஏற முற்பட்டார். இதனையடுத்து சட்டசபை கூட்டத்தில் பேசிய உதயநிதி எனது காரில் தாரளமாக செல்லுங்கள் ஆனால் பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள் என்று நக்கலாக கூறியிருந்தார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோ, உதயநிதி ஸ்டாலின் கார் கமலாலயம் வர அருகதையில்லையென்றும், அதற்கு முதலில் மக்களுடன் நின்று சேவை செய்திருக்க வேண்டும். ஒருவேளை அவர் வர முயற்சித்தாலும், நடிகர் ரஜினி நடித்த படிக்காதவன் படத்தில் வருவது போல் கார் ஸ்டார்ட் ஆகாது என கூறி இருந்தார். இப்படியாக திமுக பாஜக இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் யார் எதிர்க்கட்சி என்ற கேள்வியும் தமிழகத்தில் இருந்தது பாஜகவினர் நாங்கள் தான் என் கட்சி என கூறி வந்தனர் இந்த நிலையில் உதயநிதியும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சந்தித்து உண்டு பேசிய சம்பவம் தமிழக அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதயநிதி-அண்ணாமலை சந்திப்பு
இந்தநிலையில், சென்னை வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேசின் தாயார் புஷ்பா காலமானார். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சென்றிருந்தார். அதே நேரத்தில் தி.மு.க., இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி அங்கு வந்திருந்தார். ஐசரி கணேசின் தாயார் புஷ்பா அஞ்சலி செலுத்திய பின், இருவரும் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது, கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நலன் குறித்து அண்ணாமலை கேட்டறிந்தார். அரசியலில் அண்ணாமலையும் உதயநிதி ஸ்டாலின் நேர் எதிராக உள்ள நிலையில் துக்க நிகழ்ச்சியில் ஒன்றில் இருவரும் நேரடியாக சந்தித்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதையும் படியுங்கள்
தந்தை நலம் பெற தி.மலையில் பிரார்த்தனை செய்த முதல்வரின் மகள் !