கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை.! காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது- திமுக அரசை விளாசும் அண்ணாமலை

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்திருப்பதாக விமர்சித்துள்ளார்.

Annamalai alleged that Coimbatore is turning into a killing city

கோவையில் தொடரும் கொலை

கோவை நீதிமன்றம் பின்புறத்தில்  2 இளைஞர்கள் மீது  5 பேர் கொண்ட மர்மகும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்திருக்கின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

என்ன ஒரு தைரியம்..! பட்டப்பகலில் கோர்ட் பின்புறத்தில் போட்டு தள்ளிவிட்டு அசால்டாக நடந்தும் செல்லும் கும்பல்.!

Annamalai alleged that Coimbatore is turning into a killing city

பொதுமக்கள் அச்சமின்றி வாழ நடவடிக்கை

ஒட்டு மொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தைத்  தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு.


உடனடியாக, தமிழக முதலமைச்சர் அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான  நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சென்னை நகை கடையில் கொள்ளை அடிக்க பயன்படுத்தி கார் பறிமுதல்.! கொள்ளையர்களை நெருங்கிய போலீஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios