அமைதியாக இருந்து வந்த மு.க.அழகிரி இப்போது திமுகவை திக்குமுக்காட கிளம்பி இருக்கிறார். முரசொலி விவகாரம் உச்சத்தில் இருக்க, இப்போது அண்ணா அறிவாலயப் பிரச்னைக்கு அடிப்போட்டிருக்கிறார்.

 

முரசொலி ஆபீஸ் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம். அதனால் ஸ்டாலின் உரியவர்களிடம் அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும்" என்று பஞ்சமி தொடர்பான பஞ்சாயத்தை ஆரம்பித்தார் ராமதாஸ். இதையடுத்து "முரசொலி ஆபீசுக்கு பட்டா இருக்கு.." என்று சொல்லி, அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டு ராமதாசுக்கு பதிலடி தந்தார் ஸ்டாலின். ஆனால் ராமதாஸ் மூலப்பத்திரத்தை கேட்டார்.

 இந்த விவகாரத்தை விமர்சித்து ஸ்டாலினிடம்  4 கேள்விகளை கேட்டார். ‘முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?" ஒப்பந்தம் "முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?" எனக் கேட்டு அதிர வைத்தார். 

இந்நிலையில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த மு.க.ஸ்டாலினின் அண்ணனான மு.க.அழகிரி தன் பங்கிற்கு அண்ணா அறிவாலயத்தையும் இழுத்து விட்டிருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’’அண்ணா  அறிவாலயமும் வாடகை இடம் தான். பத்து வருடமாக திமுக வாடகை தராமல் இருப்பது கூடுதல் தகவல்’எனக் கூறி அதிர வைத்திருக்கிறார். முரசொலி இட விவகாரத்தில் திமுக விழி பிதுங்கி நிற்கையில், அண்ணா அறிவாலய விவகாரத்தை கிளப்பி அழகிரி விரலை விட்டு ஆட்டக் கிளம்பி இருக்கிறார்.