Asianet News TamilAsianet News Tamil

தூத்துக்குடியில் ஜெயிக்கப்போவது கனிமொழி தான்!! 100 பவுன் தங்கம் பரிசு அறிவித்த அனிதா ராதாகிருஷ்ணன்....

ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழியை ஜெயிக்க வேண்டும் என பிரமாண்ட கறி விருந்துக்கும் ஏற்பாடு செய்த  அனிதா ராதாகிருஷ்ணன் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பிரமாண்ட பரிசு அறிவித்துள்ளார்.

Anitha radhakrishnan announced 100 pounds for win kanimozhi
Author
Chennai, First Published Feb 22, 2019, 9:41 PM IST

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மகளிரணி செயலாளருமான கனிமொழி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனால் தூத்துக்குடி தொகுதிக்கு உடபட்ட திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் பகுதிகளின் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன். 

அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், அவர் வெற்றி பெற வேண்டும் என்பதால், மாவட்ட, திமுக,வினரும், கனிமொழி ஆதரவாளர்களும் முழு வீச்சில் இறங்கி உள்ளனர்.

Anitha radhakrishnan announced 100 pounds for win kanimozhi

இதற்காக திமுக நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்களுக்கு பிரமாண்ட கறி விருந்துக்கும் ஏற்பாடு செய்த அந்த தொகுதி, MLA, அனிதா ராதாகிருஷ்ணன். 300 கிடாக்கள் அதாவது 2000 கிலோ மட்டன் , 2000 கிலோ சிக்கன் பிரியாணி என விருந்து களைக்கட்டியது. 

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், " ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி ஜெயிக்க வேண்டும். அதற்காக சிறப்பாக தேர்தல் பணியாற்றுங்கள். சிறப்பாக செயலாற்றி அதிக வாக்குகளை கனிமொழி அவர்களுக்கு பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு 100 பவுன் தங்க காசு பரிசளிக்கப்படும்" என  அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Anitha radhakrishnan announced 100 pounds for win kanimozhi

இதனைக் கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்துள்ள திமுகவினர், 100 பவுன் தங்க பரிசை தட்டிச் செல்ல, கனிமொழியை 5 லட்சம் வாக்குகளுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் என உறுதிமொழி எடுத்தனர். அனிதா ராதா கிருஷ்ணனின் இந்த அதிரடி அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. எதிரணியில் நிற்கப்போகும் வேட்பாளரும் கதிகலங்கிப் போயுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios