Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதி சடங்குக்கு ரூ. 15 ஆயிரம்... அதிரடியாக உத்தரவிட்ட முதல்வர்..!

மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் கொரோனா தடுப்பு ஆய்வுப் பணிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.  கூட்டத்தின் முடிவில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குகளை செய்ய அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக முடிவு செய்தார். இந்த முடிவை எல்லா உடனடியாக அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

Andhra CM Jagan mohan reddy ordered to 15k for corona death rites
Author
Andhra Pradesh, First Published Jul 14, 2020, 9:29 PM IST

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கை செய்ய அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்க மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். Andhra CM Jagan mohan reddy ordered to 15k for corona death rites
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரபிரதேசத்திலும் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. ஆந்திராவில்  கொரோனா பாதிப்புகளால் இதுவரை 365 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அண்மையில், பல்வேறு வகையான உயிர் காக்கும் வசதிகளுடன்கூடிய 1088 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை விஜயவாடாவில் தொடங்கி வைத்தார். ஏற்கனவே சேவையில் இருந்த ஆம்புலன்ஸ்கள் உயிர்காக்கும் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ்களாக தரம் உயர்த்தப்பட்டன. Andhra CM Jagan mohan reddy ordered to 15k for corona death rites
இந்நிலையில் மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் கொரோனா தடுப்பு ஆய்வுப் பணிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.  கூட்டத்தின் முடிவில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குகளை செய்ய அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் வழங்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக முடிவு செய்தார். இந்த முடிவை எல்லா உடனடியாக அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios