தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதாஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் என கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வந்து கொண்டிருக்கிறார்கள்.

கொரோனவின் பாதிப்பு தமிழகத்தில் படுவேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள் பாதிப்படைந்து வரும் நிலையில், தொற்றை தடுக்க போராடி வரும் அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் தொற்று பரவி வருகிறது.

குறிப்பாக தமிழக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் அதிகளவு பாதிப்படைந்து வருகின்றனர். இதில் ஏற்கனவே கொரோனா தொற்றால் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் பலியாகிவிட்டார்.. அவரைத் தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்களில் 15க்கும் அதிகமானோர் இதுவரை கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதாஜீவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, அவரது மகள் மற்றும் மருமகனுக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.