வட மாவட்டங்களில் தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் வீழ்த்த இப்போதே வியூகம் அமைத்து வருகிறது பாமக. 

வடமாவட்டங்களில் வன்னிய ஓட்டுக்கள் திமுகவுக்கு சாதமாக விழும் எல்லா முயற்சிகளையும் இனி வேல்முருகன் இறங்கி எடுப்பார் என்றே நம்பப்படுகிறது. வட மாவட்டத்தில் பாமகவுக்கு இணையாக இல்லாவிட்டாலும் கணிசமான வாக்குகள் வேல்முருகனுக்கு உள்ளது. இன்னொரு பக்கம் காடுவெட்டி குரு ஆதரவாளர்களும் வேல்முருகனுக்கு துணையாக இருந்து வருகிறார்கள்.

 

இவை அத்தனையையும் திமுகவுக்கு வாக்குகளாக மாற்ற வேல்முருகன் களம் இறங்குவார் என தெரிகிறது. பாமக பெல்ட்டில் உள்ள வேல்முருகனை வைத்து வாக்குகளை அள்ளப் பார்க்கிறது திமுக. ஒருபக்கம் பிரசாந்த் கிஷோர் இன்னொரு பக்கம் வேல்முருகன் என திமுக கணக்கு போட்டு வருகிறது. வட மாவட்டங்களில் தி.மு.க., போட்டியிடும் 90 தொகுதிகளை குறி வைத்து பா.ம.க.,வினர் இப்போதே தேர்தல் பணிகளை துவங்கி இருக்கின்றனர். 

வன்னியர் சமுதாயத்தை, தி.மு.க. புறக்கணிப்பதாக புள்ளி விபரங்களோடு பிரசாரம் செய்து வருகிறார்கள். அந்தக் கட்சியின் இளைஞர் அணி தலைவர், அன்புமணி, 90 தொகுதிகளிலும் கிராமம், கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து பேச தயாராகி வருகிறார்.