* உலக நாடுகளால் புகழப்படும் பிரதமராக மோடி உள்ளார். அவரது ஆட்சியில் மதக்கலவரம், பயங்கரவாத தாக்குதல் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளார். மோடிக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருப்பர்: ஓ.பன்னீர்செல்வம்.
* உலக நாடுகளால் புகழப்படும் பிரதமராக மோடி உள்ளார். அவரது ஆட்சியில் மதக்கலவரம், பயங்கரவாத தாக்குதல் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளார். மோடிக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருப்பர்: ஓ.பன்னீர்செல்வம்.
(ஆமாமா கடந்த அஞ்சு வருஷமா பாகிஸ்தான் தீவிரவாதிங்க எல்லாரும் காஷ்மீர் எல்லையில வந்து ரோசா பூ தானே வித்துட்டு இருந்தாங்க. புல்வாமாவுல போட்டு தள்ளுனதெல்லாம் பயங்கரவாத தாக்குதல் இல்லை, ச்சும்மா கிச்சு கிச்சு தாம்பூழம் விளையாட்டுதானே துணைமுதல்வரே?!)
* என்னைப் பற்றி பேச ஆரம்பித்தால் காது செவுள் பிய்ந்துவிடும் என சொல்லியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. நான் சொல்கிறேன், தேர்தல் முடிவுகள் வந்து, தி.மு.க.வின் ஆட்சி அமைந்ததும் உங்கள் வாழ்க்கையே பிய்ந்துவிடும்: ஸ்டாலின்.
(சபாஷ்யா, செம்மொழியை தாய்மொழியா கொண்டிருக்கிற மாநிலத்தின் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் என்ன மாதிரியான பாஷையில பேசிக்கிறாங்கன்னு பாருங்க மக்கழே! இதற்கல்லவா நாம இவங்களை எம்.எல்.ஏ.வாக்கி, அதுக்கும் மேலே பெரிய பதவிகள் பெற காரணமாயிட்டோம். மகிழ்ச்சி!)
* என்னை இந்து சமூகத்திற்கு எதிரானவன், வன்னியர்களுக்கு எதிரானவன் என்று பா.ம.க. அவதூறு பரப்புகிறது. நான் அப்படியில்லை. கருணாநிதியை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவன். தி.மு.க.வில் உறுப்பினராக இல்லையே தவிர, எவ்வித நிபந்தனையுமின்றி அக்கட்சியுடன் பழகுபவன்: திருமாவளவன்.
(க்கும்....இந்துக்களுக்கு எதிரானவன் இல்லைன்னு சொன்ன வாயோடேயே அப்படியே கருணாநிதியை குருவா ஏத்துக்கிட்டவன்னு சொல்லிட்டீங்களே! இதுக்கு மேலே உங்களை எப்படி நம்பாம இருக்க முடியும் பாஸு)
* ஜெயலலிதாவின் ஆசியால் எம்.பி.யான நான், மாநிலத்தின் வளர்ச்சிக்காக 850-க்கும் மேற்பட்ட கேள்விகளை லோக்சபாவில் எழுப்பியுள்ளேன்: ஜெயவர்தன்.
(எம்.பி.கள் வீடு எங்கே இருக்குது? கேண்டீன் எங்கே இருக்குது? ஓவர் குளிரடிச்சா ஹீட்டர் எப்படி போடுறது?...ன்னு டெல்லியில கேள்வி கேக்குறதெல்லாம் மாநில வளர்ச்சிக்கான கேள்வியா தம்பி!)
* தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் முதலாளிகளாக உள்ளனர். அவர்களுக்கு விவசாயிகளின் பிரச்னை தெரியாது: அன்புமணி.
(ஆமா அண்ணன் ரெண்டு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து உழவோட்டுற ஏழை விவசாயி. காலையில மாட்டு வண்டிய ஓட்டிகிட்டு போனார்னா ராவுல கூழுக்குதான் வூட்டுக்கு வருவாரு, அப்படியே விவசாய பிரச்னைகளை பிழிஞ்சு குடிச்ச மனுஷன். அடிக்கிற வெயிலுக்கு ஏனுங்க அன்பு கடுப்ப கெளப்புறீங்க?)
