anbumani ramadoss press meet

அமைச்சர் செங்கோட்டையனை விவாதத்திற்கு அழைத்தது அவமானப்படுத்துவதற்காக இல்லை என்றும், ஆரோக்யமான கலாச்சாரத்தை தமிழகத்தில் உட்புகுத்தவே என்று பாமக இளைஞரணி அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி துறை குறித்து விவாதம் நடத்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு, அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கான ஏற்பாடுகள் பாம சார்பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காத நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், 700 ஆசிரியர்களுக்கு கையூட்டு பெற்று கொண்டு பணி மாற்றம் மற்றும் உயர்வு நடைபெற உள்ளது என்று புகார் அளித்த பின் நடைபெற்ற மாறுதல்கள் சரியான முறையில் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் தமிழகத்தில் சமச்சீர் பாடத்திட்டம் சி.பி.எஸ்.இ படத்தின் அளவிற்கு உயர்த்தபட்டிருந்தால் மாணவர்கள் பயனடைந்திருப்பார்கள் என்றும் அதை விடுத்து கொள்ளை அடிப்பதிலேயே அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தங்கி இருக்கவில்லை, என்றும் அவர் மேல் உள்ள வழக்கு விஷயங்களுக்காகவே அங்கு தங்கியுள்ளார் என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.