தமிழகத்தை திறந்தவெளி குடிப்பகமாக்குவதா.? முதல்வருக்கு தெரியுமா.? அவர் ஒப்புதலுடன் தான் நடைபெறுகிறதா? அன்புமணி

திருமண அரங்கம், விளையாட்டுத் திடல்களில் மது வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கும் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, தமிழகத்தை திறந்தவெளி குடிப்பகமாக்குவதா? சமூகமே சீரழிந்து விடும்! என தெரிவித்துள்ளார். 

Anbumani Ramadoss has condemned the sale of alcohol in marriage halls in Tamil Nadu

திருமண அரங்கில் மது கூடம்

தமிழகத்தில் தமிழ்நாட்டில் திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மதுவை இருப்பு வைக்கவும், விருந்தினர்களுக்கு பரிமாறவும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் இந்த முடிவு மிக மோசமான சமூக, பண்பாட்டு சீரழிவுக்கு வழிவகுக்கும். மக்கள்நலனில்  சிறிதும் அக்கறையின்றி, அரசின் வருவாயையும், சில தனி ஆள்களின் வருவாயையும் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கமுக்கமாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதியா.? வாய்ப்பே இல்லையென மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

Anbumani Ramadoss has condemned the sale of alcohol in marriage halls in Tamil Nadu

வீடுகளில் மது பரிமாற அனுமதி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு இரு நாட்கள் முன்னதாக  வெளியிடப்பட்ட தமிழக அரசின் சிறப்பு அரசிதழ் அறிவிக்கையில், இது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் போன்ற வணிக பயன்பாட்டு இடங்களில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் சிறப்பு உரிமம் பெற்று, மதுவை இருப்பு வைக்கவும், பரிமாறவும் சிறப்பு உரிமம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மது பரிமாறுவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

Anbumani Ramadoss has condemned the sale of alcohol in marriage halls in Tamil Nadu

எந்த அரசும் இப்படி ஒரு முடிவை எடுக்காது

தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து ஒற்றை வரியில் விவரிக்க வேண்டும் என்றால்,‘எங்கும் மது வெள்ளம்... எப்போதும் மது வெள்ளம்’ என்று தான் குறிப்பிட வேண்டும். அரசின் இந்த முடிவை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த முடிவால் ஏற்படவிருக்கும் சமூக, பண்பாட்டுச் சீரழிவுகளும், கேடுகளும் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும் இப்படி ஒரு முடிவை எடுக்கத் துணியாது. ஆனால், தமிழ்நாட்டில் மதுவைக் கையாளும் உரிமை சில  குழுக்களுக்கு வழங்கப்பட்டதன் விளைவு தான் இத்தகைய மிக மோசமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

Anbumani Ramadoss has condemned the sale of alcohol in marriage halls in Tamil Nadu

கண்களை மறைத்துவிட்டதா.?

திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் போன்றவை வணிக பயன்பாட்டு இடங்கள் மட்டும் அல்ல... அவை பொதுமக்கள் கூடும் இடங்கள். திருமண அரங்கங்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளாக இருந்தாலும், பிற கொண்டாட்டங்களாக இருந்தாலும் அதில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொள்வதை தவிர்க்க முடியாது. அத்தகைய இடங்களில் மது வினியோகிக்கப்பட்டால் என்னென்ன தீய விளைவுகள் ஏற்படும் என்பதை இந்த முடிவை எடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களால் சிந்திக்க முடியவில்லையா? அல்லது இப்படி ஓர் அனுமதியைக் கொடுப்பதால் தங்களுக்கு கிடைக்கப் போகும் பயன்கள் அவர்களின் கண்களை மறைத்து விட்டதா? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

Anbumani Ramadoss has condemned the sale of alcohol in marriage halls in Tamil Nadu

கட்டுப்பாடு இல்லாமல் மது விற்பனை

திருமண அரங்கங்களும், விருந்துக் கூடங்களும் ஊருக்கு வெளியில் தனித்து இருப்பவை அல்ல. மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் தான் அவை உள்ளன. அந்த இடங்களில் ஒரே நேரத்தில் குறைந்தது ஆயிரம் பேர் முதல் பல்லாயிரக்கணக்கானோர் வரை கூடுவார்கள். அவர்களில் பாதிப் பேர் மது அருந்துவதாக வைத்துக் கொண்டால், அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதி மனிதர்கள் நடமாடும் பகுதியாக இருக்காது. திருமண அரங்கங்கள், விருந்துக் கூடங்களுக்கு அருகில் வீடுகள், ஆலயங்கள், பள்ளிகள் போன்றவை நிறைந்திருக்கும். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் மது அருந்தினால், அவர்களின் அட்டகாசங்களால் அப்பகுதிகளில் பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாத நிலை  உருவாகும். அதுமட்டுமின்றி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு விபத்துகளும், சட்டம் & ஒழுங்கு சிக்கல்களும் அதிகரிக்கும்.

அதைவிடக் கொடுமை என்னவென்றால், வீடுகளில் நடைபெறும் நிகழ்வுகளிலும் மதுவை பரிமாறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது தான். தமிழ்நாட்டின் மதுக் கொள்கையின்படி குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அனுமதிக்கக் கூடாது; பள்ளிகள் மற்றும் கோயில்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது. ஆனால், தமிழக அரசு அளித்துள்ள புதிய அனுமதிகளின் அடிப்படையில்  இந்த விதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படும். கோயில்களுடன் இணைந்த திருமண அரங்கங்களில் கூட மது பரிமாறப்படக்கூடும். மதுக்கடைகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் தான் மது வணிகம் செய்யப்படும். ஆனால், தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு உரிமத்தின்படி எந்த வகையான  நேரக் கட்டுப்பாடும் இல்லை. 24 மணி நேரமும் மது வெள்ளம் பாய அரசு கதவுகளை திறந்து விட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் திறந்தவெளி குடிப்பகமாக மாறிவிடக் கூடும்.

Anbumani Ramadoss has condemned the sale of alcohol in marriage halls in Tamil Nadu

 முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தில்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய  மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். ஆனால்,  அதற்கு மாறாக, மதுவை வெள்ளமாக பாயச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றால், இவையெல்லாம் முதல்வருக்கு தெரிந்து, அவரது ஒப்புதலுடன் தான் நடைபெறுகிறதா? என்ற ஐயம் எழுகிறது. மதுவிலக்கு குறித்த தமிழக அரசின் கொள்கை என்ன? என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

Anbumani Ramadoss has condemned the sale of alcohol in marriage halls in Tamil Nadu

தமிழ்நாட்டை ஒரு சொட்டு மதுகூட இல்லாத மாநிலமாக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம். அதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பெயருக்கு தீரா அவப்பெயரையும், துடைக்க முடியாத களங்கத்தையும் ஏற்படுத்தி விடும். இதை உணர்ந்து  திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் மற்றும் வீடுகளில் மது பரிமாற அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

மது விற்பனைக்கும் பிள்ளையார் சுழி போட்ட தந்தை.. அதுக்கு மேலே மகன் ஸ்டாலின்.. வச்சு செய்யும் பொன்னுசாமி..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios