முன்கூட்டியே முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அன்புமணி, ஆர்எஸ் பாரதி உள்ளிட்ட 3 பேர் குறைவான வருகையை பதிவு செய்துள்ளனர்.

டெல்லி: முன்கூட்டியே முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அன்புமணி, ஆர்எஸ் பாரதி உள்ளிட்ட 3 பேர் குறைவான வருகையை பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. நாளைய தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் உறுப்பினர்களின் அமளிதுமளியால் இரு அவைகளும் இன்றே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குறுக்கீடுகள் அதிகம் இருந்தன என்று சொல்லலாம். கூட்டத்தொடர் ஆரம்பித்த நாள் முதல் ஒரே அமளிதுமளிதான். வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுவிட்டாலும் விவசாயிகள் பலியானது, அவர்களுக்கு உரிய இழப்பீடு விவரம் உள்ளிட்டவைகள் மீது விவாதம் நடத்தவில்லை என்பது தான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்தது.

அடுத்து வரக்கூடிய மழைக்கால கூட்டத்தொடரில் பார்லிமென்ட் விதிகளை மீறியதாக இந்த கூட்டத்தொடரில் 12 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அதன் காரணமாகவும் இரு அவைகளிலும் அமளி தான்.

இவற்றுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தேர்தல் சீர்திருத்த மசோதா, பெண்கள் திருமண வயது மசோதா, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட பிரச்னைகளும் அவையில் எதிரொலித்தன. இன்று மக்களவை கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்தி வைத்தார்.

இதே போன்று ராஜ்ய சபாவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. நாளை வரை நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட கூட்டத்தொடர் இன்றே முடிந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட எம்பிக்களின் வருகை பதிவு பற்றிய விவரங்களும் நாடாளுமன்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டு உள்ளன.

ராஜ்யசபாவில் தமிழக எம்பிக்களில் குறைவான வருகை பதிவை வைத்திருக்கும் எம்பிக்களும் உள்ளனர். மிகவும் குறைவான வருகை பதிவை வைத்திருப்பவர் அதிமுகவின் சந்திரசேகரன். அவர் வெறும் 6 நாட்கள் மட்டுமே வருகை வைத்துள்ளார்.

அவரை தொடர்ந்து திமுகவின் ஆர்எஸ் பாரதி. இவர் 8 நாட்கள் அவைக்கு வந்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அனைவரும் தொடர்ந்து பல வாரங்களாக கேள்வி எழுப்பி வரும் அன்புமணி ராமதாஸ். இவர் மொத்தம் 10 நாட்கள் வருகை பதிவை வைத்துள்ளார்.

என்ஆர் இளங்கோ 11 நாட்கள், ஜி கே வாசன் 12 நாட்கள், கேஆர்என் ராஜசேகர், தம்பிதுரை ஆகியோர் தலா 13 நாட்கள் வருகைபதிவு வைத்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, வைகோ, கனிமொழி என்விஎன் சோமு, அந்தியூர் செல்வராஜ், பி. வில்சன், டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் 15 நாட்களுக்கு மேல் வருகை பதிவு பெற்றிருக்கின்றனர்.

நடந்துமுடிந்தகூட்டத்தொடரில் 100 சதவீதம் வருகையை பதிவுசெய்ததமிழக எம்பிக்கள் 5 பேர். திமுகவின் முகமதுஅப்துல்லா, சண்முகம், அதிமுகவைச்சேர்ந்தநவநீதகிருஷ்ணன், விஜயகுமார், எஸ்ஆர்பாலசுப்பிரமணியன் ஆகியோர் 100 சதவீதம் வருகை புரிந்து இருக்கின்றனர்.