ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலை.! மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம்- அன்புமணி எச்சரிக்கை

ஆன்லைன் சூதாட்டத்தால் 47-ஆவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,  தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் ஆளுனருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Anbumani has said that a protest will be held if the online ban bill is not approved

ஆன்லைன் சூதாட்டம்- 47வது தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலைகள் ஆளுனருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும்  உரைக்க வேண்டும் என தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சத்தை இழந்த சென்னை கே.கே. நகரை அச்சக உரிமையாளர் சுரேஷ் என்பவர் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 

அவரை நம்பியிருந்த மனைவியும், இரு குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அவர்களுக்கு எனது ஆறுதல். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் இருவர் பலியாகியுள்ளனர்.  ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நிகழ்ந்த 47-ஆவது தற்கொலை இது. புதிய சட்டம் இயற்றப்பட்ட 139 நாட்களில் 18 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். 

இரட்டை வேடம் அல்ல, இருபது வேடங்கள் கூடப் போடுவீர்கள்.! திமுகவிற்கு எதிராக சீறும் அண்ணாமலை

Anbumani has said that a protest will be held if the online ban bill is not approved

ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம்

ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை; மற்றவர்களை காப்பதற்காவது அதை தடை செய்யுங்கள்’ என்று சுரேஷ் தற்கொலை கடிதத்தில்  குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த எதார்த்தமும், வலியும் ஆளுனருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும்  உரைக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு சட்டம் இயற்றி 5 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுனர் காலம் தாழ்த்துவது ஒட்டுமொத்த மக்களையும் அவமதிக்கும் செயல். இதைவிட மனிதநேயமற்ற நடவடிக்கை எதுவும் இருக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளுனருக்கு எதிரான மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என அன்புமணி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள்... கடிதம் எழுதிவைத்துவிட்டு ஒருவர் தற்கொலை!!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios