Asianet News TamilAsianet News Tamil

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் குழப்பம்.! மின் கட்டணம் செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி- அன்புமணி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் உள்ள குழப்பங்களை போக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

Anbumani emphasized that the confusion in linking Aadhaar with electricity connection number should be removed
Author
First Published Nov 23, 2022, 11:39 AM IST

மின் கட்டணம் செலுத்த நிபந்தனை

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதில் ஏற்பட்ட குழப்பத்தை நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் வழியாக இணைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால்  மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

அதனால் மின் சந்தாதாரர்கள்  கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்! மின்வாரிய சீர்திருத்தத்திற்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், எந்த ஒரு சீர்திருத்தத்தையும் செய்வதற்கு முன் அது குறித்து மக்களிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதிய அவகாசம் கொடுக்காமல் திணிக்கக் கூடாது!

சபரீசனை சந்தித்து பேசினாரா காயத்ரி ரகுராம்..? அமர் பிரசாத் ரெட்டி போட்ட பதிவால் பரபரப்பு

Anbumani emphasized that the confusion in linking Aadhaar with electricity connection number should be removed

ஆதார் இணைப்புக்கான இணையவழி இணைப்பு ஒரு வாரத்திற்கு முன்பு தான் வெளியிடப்பட்டது.  அடுத்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. அதற்குள்ளாகவே ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது நியாயமல்ல! மின் இணைப்பு எண்ணுடன்  ஆதாரை எதற்காக இணைக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையானோருக்கு தெரியவில்லை.

அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்! ஆதாரை இணைப்பதற்கு குறைந்தது இரு மாதம் அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதற்குள்ளாக மின் பயன்பாடு குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்ய செல்லும் போது, பயனாளிகளின் ஆதார் அட்டையை பெற்று அங்கேயே இணைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

15 நாட்களுக்கு முன்பே புகார்.? அறிவுரை வழங்கிய அண்ணாமலை.! ஆடியோ வெளியானதால் சூர்யா சிவா மீது நடவடிக்கையா ?

Follow Us:
Download App:
  • android
  • ios