ஏய்யா.. ஆரத்தி எடுக்கும் போது முட்டிகிட்டு நிக்கிறீங்களே... தருமபுரி செந்திலை டரியல் ஆக்கிய அன்புமணி
திராவிட மாடல் என்ன சொல்லிக் கொள்ளும் நீங்கள், தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுக்கும் போது முட்டிக்கொண்டு கும்பிடு போடுகிறீர்களே என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிட மாடல் என்ன சொல்லிக் கொள்ளும் நீங்கள், தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுக்கும் போது முட்டிக்கொண்டு கும்பிடு போடுகிறீர்களே என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். காலம் காலமாக நடந்து வரும் பூஜையை தடுத்துவிட்டு திராவிட மாடல் என தர்மபுரி எம்பி செந்தில்குமார் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது என்றும் அன்புமணி விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதே நேரத்தில் அதிமுக, பாஜக திமுக அரசு பல திட்டங்களை விமர்சித்து வருகின்றன.
குறிப்பாக பாஜக திமுக அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்றும், இந்து மத உணர்வுகளுக்கு எதிரான அரசு என்றும் விமர்சித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தர்மபுரி நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜை நிகழ்ச்சிக்கு அத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இதற்கு பலரும் ஆதரவு, எதிர்ப்பு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திராவிட மாடல்:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் பகுதியில் 1.38 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏரியை புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூஜை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர், அப்போது அதை தொடங்கி வைக்க தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அங்கு வருகை தந்தார், அங்கு பொதுப் பணித்துறை அதிகாரிகள் சார்பில் பூஜை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பூ, பழம், தேங்காய் என அனைத்தும் பூஜைக்கு தயாராக இருந்தது. அதைக் கண்ட செந்தில்குமார் இது திராவிட மாடல் ஆட்சி, அதில் சடங்குகள், சம்பிரதாயங்கள் செய்யக்கூடாது என்று உங்களுக்கு தெரியாதா என அதிகாரிகளிடம் ஆவேசம் காட்டினார்.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை.. 19 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..
மேலும், இங்கே இந்து மத சடங்கு நடக்கிறது அப்படி என்றால் மற்ற இரு மதத்தினர் எங்கே? இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் எங்கே என கேள்வி எழுப்பினார். பின்னர் பதில் பேச முடியாத அதிகாரி மன்னிப்பு கோரினார். பின்னர் பூஜை செய்ய வந்திருந்த புரோகிதம் அங்கிருந்து அனுப்பப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. பல ஹிந்து மத ஆர்வலர்கள் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் செயலை வன்மையாக கண்டித்து வருகின்றனர்,
பலரும் அவருக்கு போன் செய்து தங்களது ஆதங்கத்தையும், கட்டணத்தையும் பதிவு செய்து வருகின்றனர். அவரும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பாஜக அதிமுகவை இந்த செயலை கண்டித்துள்ளது.
எம்.பி செந்தில் குமாரை கண்டித்த அன்புமணி:
இந்நிலையில் இது குறித்து விமர்சித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், எம்பி செந்தில்குமாரை விமர்சித்துள்ளார். அதில் அன்புமணி பேசியதாவது:- சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று பார்த்தேன், தர்மபுரி எம்பி வீடியோ வந்திருக்கிறது, ஏதோ ஒரு அரசு நிகழ்ச்சியில் ஏதோ ஒரு பூஜை நிகழ்ச்சி செய்கிறார்கள், இது மிகவும் சாதாரணமானதுதான், எல்லோரும் செய்வதுதான், அது அவர் அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகிறது, ஆனால் அங்கு வந்த எம்.பி, இது திராவிட மாடல் இதுபோன்ற பூஜைகள் போடக்கூடாது என கூறுகிறார்.
இதையும் படியுங்கள்: இதெல்லாம் பார்க்கும்போது காவல்துறையின் மெத்தனமே கலவரத்திற்கு காரணம்.. சும்மா கேள்வியால் தெறிக்கவிடும் சசிகலா
ஏய்யா... திராவிட மாடலுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் இருக்கிறது? அந்த அதிகாரிகளுக்கு அங்கு இருப்பவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, அதனால் அவர்கள் செய்கிறார்கள். இது காலம் காலமாக நடப்பது தான், நான் கேட்கிறேன், தேர்தல் நேரத்தில் மட்டும் ஆரத்தி எடுக்கும்போது முட்டிக்கொண்டுபோய் கும்பிடு போடுகிறீர்களே, அப்போது திராவிட மாடல் இல்லையா? இதுல என்ன இருக்கிறது? இது அவரவர்களின் நம்பிக்கை, உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஓரமாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும், இது குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை, அப்படிப் பேசினால் நான் அவருக்கு வேண்டப்பட்டவர் இவருக்கு வேண்டபட்டவர் என்று பேசுவார்கள். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.