பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் - சௌமியா அன்புமணி தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சம்யுக்தாவுக்கும், அன்புமணியின் சகோதரி காந்தி - பரசுராமன் தம்பதிகளின் மகன் ப்ரித்தீவனுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது.

 

இந்நிலையில் சம்யுக்தா கர்ப்பமுற்றார். இந்நிலையில் அவருக்கு நேற்று  புதன்கிழமை சென்னை மருத்துவமனையில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

 

தாயும், சேய்களும் நலமாக உள்ளனர். இரட்டை குழந்தை பிறந்துள்ளதால் ராமதாஸ் குடும்பத்தினர் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகளை கொடுத்து மகிழ்ந்தனர். மேலும் தமிழகம் முழுவதும் பாமகவினர் இதனனைக் கொண்டாடி வருகின்றனர்.