Asianet News TamilAsianet News Tamil

விவசாயிக்கும், வியாபாரிக்கும் நடக்கும் தேர்தல்... அதிமுகவுக்கு ஆதரவு கேட்கும் அன்புமணி..!

வருகின்ற சட்டமன்ற தேர்தல், விவசாயிக்கும், வியாபாரிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

Anbumani asks for support for AIADMK
Author
Tamil Nadu, First Published Mar 23, 2021, 10:48 AM IST

வருகின்ற சட்டமன்ற தேர்தல், விவசாயிக்கும், வியாபாரிக்கும் இடையே நடக்கும் தேர்தல் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani asks for support for AIADMK

பாமக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ’’வன்னியருக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்த தமிழக முதலமைச்சர், வருங்காலத்தில் அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுப்பார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.Anbumani asks for support for AIADMK

திருவள்ளூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா மற்றும், பூவிருந்தவல்லி பாமக வேட்பாளர் இராஜமன்னார் ஆகியோரை ஆதரித்து இன்று திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது நடைபெற உள்ள இந்த தேர்தல் விவசாயி எடப்பாடி பழனிச்சாமிக்கும் வியாபாரி முக ஸ்டாலினிக்குமான தேர்தல் என்றும், இதில் விவசாயி வெற்றி பெற அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணாவுக்கு இரட்டை இலை சின்னத்திலும், பூவிருந்தவல்லி வேட்பாளர் இராஜமன்னாருக்கு மாம்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். வன்னியர்களுக்கு 10.5. சதவிகிதம் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்த தமிழக முதல்வர் வருங்காலத்தில் அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

.

Follow Us:
Download App:
  • android
  • ios