கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்க்கே உதித்தலும் திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைக்கமாட்டோம் என அன்புமணியும், 100 க்கு 200 சதவீதம் அவர்களுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என ராமதாஸும் கூறியது சொல்லிவிட்டு அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக கூட்டணி அமைத்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளது.

அதிமுக – திமுக என திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து வந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அரசியல் காட்சிகளையும் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்க்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, அதிமுகவுடனான கூட்டணி ஏன்? என்ற கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

இதன் பிறகு செய்தியாளர்கள் கேள்வியெழுப்பத் தொடங்கினர். ஊழல் குற்றச்சாட்டுகளையும், பல்வேறு திட்டங்கள் குறித்தும் விமர்சித்த பாமக இப்பொழுது அதிமுகவிடம் கூட்டணி வைத்தது ஏன்? என கேட்டனர். அதுமட்டுமல்லாமல் குட்கா ஊழல் குறித்து அமைச்சர்களையும் விமர்சித்தீர்கள்.

குறிப்பாக அதிமுக ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் என அனைவரையும் கடுமையாக விமர்சித்த அன்புமணி, இப்பொழுது தேர்தலில் அவர்களிடம் கூட்டணி வைத்தது மக்களை ஏமாற்றுவதாக இல்லையா என அடுக்கடுக்கான கேள்விகளால் பதிலளிக்க முடியாமல் திணறினார் அன்புமணி. தொடர் கேள்விகளால் துளைத்த பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு திணறிய அன்புமணி, ஒரு கட்டத்தில் கோபமடைந்து  செம்ம காட்டமாக பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.

பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளால் கோபமடைந்த அன்புமணி, பத்திரிகையாளர் ஒருவருக்கு, ”அவருக்கு தண்ணி கொடுங்கப்பா” ரொம்ப ஆவேசமா இருக்காரு என சிரித்து சமாளித்தார். அன்புமணியின் தொடர் கோபமான பதில்களால் செய்தியாளர் சந்திப்பில் நிமிடத்திற்கு ஒருமுறை சலசலப்பு  தொடர்ந்தது. அதேபோல தொடர்ந்து அதிமுக குறித்த கேள்விகளுக்கு அன்புமணி கோபமாக பேசினார். அதுகுறித்து கேள்வி கேட்ட பல பத்திரிகையாளர்களுக்கு அன்புமணி கோபமாக பதில் அளித்தார்.  

செய்தியாளர் சந்திப்பில் .....

கேள்வி- அதிமுக ஊழல் உள்ள கட்சியா? இல்லையா? நீங்கள் இன்னும் அந்த நிலைபாட்டில் உள்ளீர்களா?

அன்புமணி: பார்க்கலாம், விசாரணை நடக்கும் வரை பொறுத்திருங்கள்

கேள்வி: ஊழல்வாதி ஜெயலலிதாவிற்கு மணிமண்டபமா என்ற நீங்கள் கேட்டீர்கள்? அந்த நிலைப்பாடு எப்படி உள்ளது?

அன்புமணி: பதில் அளிக்க முடியாது!

கேள்வி- அதிமுகவுக்கு எதிராக நீங்கள் வைத்த புகார்களுக்கு மன்னிப்பு கேட்க தயாரா?

அன்புமணி: அனைத்திற்கும் எல்லாம் உண்டு அமைதியாக இருங்கள்! உட்காருங்கள்!

கேள்வி - விஜயபாஸ்கர் மீதான உங்களின் புகார்கள் அப்படியேதான் இருக்கிறதா? அதற்கு மன்னிப்பு கேட்பீர்களா?

அன்புமணி - செய்தியாளர்கள் அசிங்கமாக நடந்து கொள்ள வேண்டாம்.. விட்டா என்னை அடிச்சிட்டுவீங்க போல. நீங்கள் கேட்பதற்குத்தான் பதில் சொல்கிறேன்.

செய்தியாளர்: உங்கள் மீது எழும் கேள்விகள் எல்லாம் நியாயமான கேள்விகள்தான்.. புரிந்து கொள்ளுங்கள்!

அன்புமணி: போதும், போதும்.. நீங்கள் கேள்வி கேட்டதே போதும். அவரின் மைக்கை வாங்குங்கள்.. அவரின் மைக்கை ஆப் செய்யுங்கள், என்று கோபமாக குறிப்பிட்டார். ..