எப்படியாவது அன்புமணியை மண்ணைக் கவ்வ வைக்கவேண்டும் என, திமுக தரப்பில் டாக்டர் செந்தில் குமாரை களமிறங்கினார் ஸ்டாலின். இந்த வன்னியர்கள், தலித் சமபலத்துடன் இருக்கும் தொகுதியென்பதால்  இந்த இரண்டு சமூக வாக்கு வங்கியை இழுக்கும் அளவிற்கு ஒரு வேட்பாளரான செந்திலை களமிறங்கினர்.  தினகரனும் அதே டெக்னீக்கை இம்ப்ளீமென்ட் செய்தார். இப்படி ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களை களமிறக்கியுள்ளதால், அன்புமணியை வாக்கு அப்படியே சிதறும் நிலை ஏற்பட்டது. 

இது போக காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் பாமக மீது செம கடுப்பில் உள்ளதும், அந்த கடுப்பு அப்படியே வேல்முருகனிடம் சேர்ந்ததால், வேல்முருகன் திமுகவிற்கு ஆதரவாக உள்ளதால் பாமக ஓட்டுகள் பல்க்காக அப்படியே திமுகவுக்கே விழுந்ததாகவே சொல்கிறார்கள்.

ஆளும் தரப்பின் சப்போர்ட் தருமபுரி தொகுதிக்கு சற்று குறைவாக உள்ளதாகவும் சொல்லப்பட்டதால். அதிமுகவை பொறுத்தவரை எம்பி தேர்தலை விட  இடைத்தேர்தல் நடந்த அரூர், பாப்பிரெட்டிக்கு தான் அதிக கவனம் செலுத்தினர் அமைச்சர்கள். இது போக அதிமுக - பிஜேபி கூட்டணி மீதான அதிருப்தியும், கடந்த காலங்களில் பிஜேபி அதிமுகவைப் பற்றி தாறுமாறாக விமர்சித்துத் தள்ளிவிட்டு அப்படியே அந்தர்பல்டி அடித்து அவர்களுடனேயே கூட்டணியில் சேர்ந்துகொண்டது என பல்வேறு விமர்சனங்கள் அன்புமணி மீது விழுந்ததால், மொத்தமாகவே மைனஸாகவே அமைந்தது இதன் வெளிப்பாடாகவே,தேர்தல் நடக்கும் சமயத்தில் பூத்தில் நாம்தான் இருப்போம், நமக்குத்தான் வெற்றி என்று பாமக தொண்டர்களை உசுப்பேத்தினார். இது போக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அன்புமணி வாக்காளர்களிடம் கண்ணீர் விட்டு அழுவது போன்ற வீடியோ  வைரலானது  அதில், ‘கட்சியினரை சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டு அன்புமணி அழுதார்’ என பாமக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த வீடியோவை வைத்து திமுகவினர் அன்புமணியைக் கலாய்த்துவருகின்றனர்.

அந்த வீடியோவை வன்னியர்களிடம் காட்டி ஓட்டு சேகரிக்கும் முயற்சியில் பாமகவினர் ஈடுபட்டனர் குறிப்பாகப் பெண்களிடம் வீடியோவை காட்டி அனுதாப ஓட்டு பெறும் முயற்சியில்  ஈடுபட்டதால், அந்தத் தோல்வி பயத்தில்தான் அன்புமணி அழுதார்' என விமர்சனம் செய்து  வந்தனர்.

நிலைமை இப்படி போய்க்கொண்டிருக்க, தேர்தல் முடிந்து மீதி காலியாக இருந்த மற்ற நான்கு தொகுதிகளுக்கும்  வரும் மே 19 அன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளில்  முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மாறிமாறி தீவிர பிரசாரம் செய்துவருகிறார்கள். அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக பிரச்சாரத்துக்கு வராமல் இருக்கும் அன்புமணி, இன்று காலை  தனது மனைவி மற்றும் கட்சியினரோடு பழனி தண்டாயுதபாணி என்னை கோயிலில் எப்படியாவது ஜெயிக்கவச்சிடு முருகா என சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.