என்.எல்.சி நிலம் எடுப்பில் பொய்..! மக்களின் அமைச்சரா? என்.எல்.சியின் முகவரா.? அன்புமணி ஆவேசம்

என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு சுரங்கங்கள் அமைப்பதற்காக கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி பறித்திருக்கும் நிலையில், தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும், இனி நிலங்களை கையகப்படுத்தப்போவதில்லை என்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய்யாகும் என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

Anbumani accused the DMK minister of lying about land acquisition for NLC

மக்களை ஏமாற்றும் என்எல்சி

எஎன்.எல்.சிக்கு நிலம் எடுக்க கடலூர் மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்ள முடியாத மாவட்ட நிர்வாகம், அனைத்து நடவடிக்கைகளையும் திரைமறைவில் செய்து  வருவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலையோ, கூட்டுறவு சங்கத்தின் மூலமான வேலையோ  வழங்க என்.எல்.சி தயாராக இல்லை எனும் நிலையில், தினக்கூலி வேலை வழங்கி மக்களை மாவட்ட நிர்வாகம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அதற்காக ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரகசியமாக செய்து முடித்தனர்.

Anbumani accused the DMK minister of lying about land acquisition for NLC

அங்கும் சென்ற பா.ம.க. குழுவினர், என்.எல்.சிக்கு நிலம் எடுக்கும் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் அனைத்தையும் திரைமறைவில் செய்வது ஏன்? என்று வினா எழுப்பினார்கள். எந்த வினாவிற்கும்    அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் நேரடியாக விடையளிக்கவில்லை. வெளியில் செய்தியாளர்களிடம் பேசும் போது மட்டும், என்.எல்.சிக்காக 2500 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தியிருப்பதாகவும், இனி  நிலம் கையகப்படுத்தப் போவதில்லை என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். அமைச்சரின் பதில் அப்பட்டமான பொய்; மக்களை ஏமாற்றும் வேலை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை.

Anbumani accused the DMK minister of lying about land acquisition for NLC

மூன்றாவது சுரங்கத்திற்காக கொளப்பாக்கம், அரசகுழி, கோ.ஆதனூர், பெருவரப்பூர், பெருந்துறை, ஓட்டிமேடு, கோட்டி முளை, சிறுவரப்பூர், க.புத்தூர், சாத்தபாடி, தர்மநல்லூர் உள்ளிட்ட 26 கிராமங்களில் உள்ள 4850 ஹெக்டேர், அதாவது 12,125 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த கடந்த 2018&ஆம் ஆண்டிலேயே  என்.எல்.சியும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் முடிவு செய்தனவா, இல்லையா? அதைக் கண்டித்து எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்ட பிறகு தான் அத்திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த இதே பன்னீர்செல்வம் நிலம் எடுப்பதை எதிர்த்து 2017-&ஆம் ஆண்டு பிப்ரவரி 7&ஆம் நாள் கம்மாபுரத்தில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாநிலை போராட்டம் நடத்தினாரா, இல்லையா?

Anbumani accused the DMK minister of lying about land acquisition for NLC

 அப்போது ‘‘மூன்றாவது சுரங்கத்திற்கு நிலம் கொடுக்க மக்கள் தயாராக இல்லை; அதனால் நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம்’’ என்று முழங்கினாரா, இல்லையா? அப்போது அப்படி முழங்கிவிட்டு,  இப்போது என்.எல்.சியின் முகவராக மாறி, நிலம் எடுக்கும் திட்டமில்லை என்று கூறுவது பொய் இல்லையா? கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை சுற்றியுள்ள சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் ஆகிய 3 வட்டங்களில் உள்ள  புத்தூர், ஆட்கொண்டநத்தம், மோவூர், ஓமம்புலியூர், தவர்த்தாம்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களில் மிக அதிக அளவில் உள்ள நிலக்கரி வளத்தை தோண்டி எடுப்பதற்கான வீராணம் நிலக்கரி சுரங்கத்திற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இன்றைய தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறதா, இல்லையா? இனி நிலமே எடுக்கப்போவதில்லை என்றால் எதற்காக இந்த ஆய்வை அனுமதிக்க வேண்டும்?

Anbumani accused the DMK minister of lying about land acquisition for NLC

மற்றொருபுறம் என்.எல்.சியால் கடலூர் மாவட்டத்திற்கு ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு காலத்தில் 8 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இப்போது 1000 அடிக்கும் கீழே சென்று விட்டது. வெள்ளக்காலங்களில் என்.எல்.சி. நிறுவனம் எந்த சமூகப்பொறுப்பும் இல்லாமல் அதன் சுரங்கங்களில் உள்ள நீரை ராட்சத குழாய்கள் மூலம் மிகப்பெரிய அளவில் வெளியேற்றுகிறது. அதனால், வெள்ளம் அதிகரித்து, மிக அதிக அளவில் உயிர் சேதமும், பயிர் சேதமும் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிறுவனத்திற்கு, சொந்த வேளாண் மக்களுக்கு துரோகம் செய்து விட்டு தமிழ்நாடு அரசு நிலம் எடுத்துத் தர வேண்டுமா?

Anbumani accused the DMK minister of lying about land acquisition for NLC

கடலூர் மாவட்ட மக்களை மிரட்டி நிலங்களை பறித்து விட்டதாக கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அவர்களால் அங்கு எதையும் செய்ய முடியாது. உழவர்களுக்கு சொந்தமான அந்த நிலங்கள் பசுமைபூமியாகவே  தொடர வேண்டும்; அங்கு விவசாயம் மட்டுமே நீடிக்க வேண்டும். மாறாக, சுற்றுச்சூழலை கெடுக்கும் கருமை பூமியாக மாற்ற பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. அதற்காக எத்தகைய தியாகத்தையும்  செய்ய பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. கடலூர் மாவட்டத்தை பாழ்படுத்தி வரும் என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேற வேண்டும். உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் அவர்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த இலக்குகளை எட்டும் வரை பா.ம.க. எந்த சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதையம் படியுங்கள்

சென்னையில் பேருந்து தனியார் மயம்..! முதலமைச்சருக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்த 9 தொழிற்சங்கங்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios