பள்ளிக் கல்வித்துறையில் அன்பில் மகேஷ் பெயில்.. உதய் ரசிகர் மன்ற பதவிக்கே லாயக்கு.. போட்டு தாக்கிய ஜெயக்குமார்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை மிக மோசமாக உள்ளதாகவும், அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதில் தோல்வி அடைந்து விட்டதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை மிக மோசமாக உள்ளதாகவும், அத்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதில் தோல்வி அடைந்து விட்டதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியைவிட, உதயநிதியை புகழ்வதற்கு தனித் துறையை உருவாக்கி அதற்கு அமைச்சர் ஆகலாம் என்றும் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்த கட்சி நிர்வாகியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தாலிக்கு தங்கம் திட்டம் தொடங்கப்பட்டது, தற்போது அதை புதுமைப்பெண் திட்டம் என்று மாற்றம் செய்து தாலிக்கு தங்கம் வழங்குவதற்கு பதிலாக கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு 1000ரூபாய் மாதம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: செருப்பை வழிபட்டவர்கள்தான் பாஜகவினர்.. அண்ணாமலையை டீல் பண்ண ஸ்டாலினுக்கு தெரியும்.. கி. வீரமணி கலாய்.
தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் 7000 கோடி மதிப்பில் 7 டன் தங்கம் 4 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர். ஆனால் தற்போது மாதம் வெறும் 1000 ரூபாய் அரசு கல்லூரி மாணவிகளுக்கு மட்டும் கிடைத்த திட்டம் மாற்றம் செய்து வழங்கப்படுகிறது, யானைப் பசிக்கு சோளப்பொறி போல இந்த திட்டம் உள்ளது. திட்டங்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மக்களுக்கு, மாணவர்கள் நலனுக்காக திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா, ஆனால் தற்போது திராவிட மாடல் என்ற போர்வையில் திராவிடத்தை திமுகவினர் கொச்சைப் படுத்துகின்றனர் என்றார்.
இதையும் படியுங்கள்: nitish kumar: பிரதமர் பதவியும் வேண்டாம், அதை விரும்பவும் இல்லை: நிதிஷ் குமார் வெளிப்படை
ஓபிஎஸ் மகன் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மனப்பூர்வமாக அதிமுகவுக்கு வரவேற்பதாக தெரிவித்திருப்பது, அதிமுக தொண்டர்களுக்கும் ஜெயல லிதாவுக்கும் செய்யும் துரோகம், ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென்றால் அவர்கள் திமுகவில் இணைந்து ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஒற்றுமையாக செயல்படலாம் என்றார். பெங்களூரு புகழேந்தி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எனது ஸ்டேட்டஸ்க்கு தகுதியானவர்களுக்கு மட்டுமே நான் பதில் கூறுவேன், புகழேந்தி யார். போறவரவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாஸ் ஆகி விட்டதாக முதலமைச்சர் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, பள்ளிக்கல்வித்துறையில் மகேஷ் பொய்யாமொழி பெயில் மார்க் வாங்கியுள்ளார். அவருக்கு பள்ளிக்கல்வித்துறையைவிட, உதயநிதி ரசிகர் மன்றத்தை கவனிக்க புதிய துறையை உருவாக்கி அதற்கு அமைச்சர் ஆக்கினால் பாஸ் ஆவார் என்று ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.