Asianet News TamilAsianet News Tamil

9 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதியின் தமிழ் பணிகள் பாடங்கள் - சட்டப்பேரவையில் அன்பில் மகேஷ் அறிவிப்பு

இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் இடம்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.

Anbil Mahesh informed that the lesson related to Karunanidhi work for Tamil will be included in class 9
Author
First Published Apr 20, 2023, 12:10 PM IST

பள்ளி கட்டிடம் கட்டப்படுமா.?

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் போது வினாக்கள் விடைகள் நேரத்தில் அதிமுக விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், "விராலிமலை தொகுதி அன்னவாசல் பேரூராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ஆவண செய்யுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  சட்ட விதிகளுக்கு உட்பட்டு அன்னவாசலில் உள்ள அந்த பள்ளிக்கு இடம் வழங்க முடியவில்லை. மேலும், பயன்பாடற்ற காவல் நிலைய குடியிருப்பு மற்றும் பொதுப்பணித்துறை சாலையாக இருப்பதாலும் பள்ளிக்கு இடம் வழங்க ஏற்றதாக இல்லை. எனவே பள்ளிக்கு கட்டிடம் கட்ட வருவாய் துறையால் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா..? அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை

Anbil Mahesh informed that the lesson related to Karunanidhi work for Tamil will be included in class 9

கருணாநிதியின் தமிழ் பணிகள்

தேர்வு செய்யப்பட்டவுடன் நபார்டு திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்ட ஆவண செய்யப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஓடி வந்த இந்தி பெண்ணே கேள், நீ தேடி வந்த நாடு இதுவல்லவே என்று தன்னுடைய 13 வது வயதில் போர் பாவை பாடி, 86வது வயதில் தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று தந்த கலைஞரின் நூற்றாண்டு தினத்தையொட்டி,  கலைஞர் கருணாநிதி  தமிழுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில், பணியை குறிக்கும் விதத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அவரைப் பற்றிய பாடம் இடமெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.  

இதையும் படியுங்கள்

அண்ணாமலை மீது நடவடிக்கை எடுங்கள்..! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திமுக எம்பி திடீர் கடிதம்

Follow Us:
Download App:
  • android
  • ios