தி.மு.க. இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதியின் கட்டளைப்படிதான் அங்குள்ள சீனியர் நிர்வாகிகள் வரை செயல்பட்டு வருகிறார்கள். 

குறிப்பாக, தனது ரசிகர்மன்ற தலைவரும், திருவெறும்பூர் எம்.எல்.ஏ.,வுமான மகேஷ் பொய்யாமொழிக்கு, மிக அதிக உரிமை கொடுத்திருக்கிறார் உதயநிதி. அந்த வகையில், திருச்சி பகுதியில் ஏற்கெனவே கோலோச்சி வந்த கே.என். நேருவை, கிட்டதட்ட ஓரம் கட்டி வருகிறார் மகேஷ். நேருவின் ஆதரவாளர்கள் பலர், ‘இனி மகேஷூக்குத்தான் எதிர்காலம்’என கணித்து அவர் பக்கம் சாய்ந்துவிட்டனர்.

 

’இதனால் மனம் நொந்த நேரு, எப்படி தனது இருப்பை வெளிப்படுத்துவது என்று படாதபாடுபட்டு வருகிறார். இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நடிகர் விமல் வீட்டுக்குச் சென்று கே.என்.நேரு சந்தித்தார். அவரை கட்சிக்குள் கொண்டுவந்தால், திருச்சி பகுதியில் தனது செல்வாக்கை மீண்டும் அதிகரிக்கலாம் என நினைக்கிறாராம் நேரு.

ஆனால், நேருவின் எதிர்பாராத வருகையினால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் நடிகர் விமல். தி.மு.க.வில் இணையும்படி நேரு கேட்க.. ‘அய்யோ.. ஆலை விடுங்க..!’ என்று எஸ்கேப் ஆகிவிட்டார். இதற்கிடையே இந்த விவகாரம் உதயநிதி தரப்புக்கு தெரியவர, நேருவுக்கு லெப்ட் அண்ட் ரைட் விழுந்திருக்கிறது. நொந்துபோய் இருக்கிறாராம் கே.என்.நேரு.