‘எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த தலைமைப்பதவியை ஏலம்போட்டு நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர்’ என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன்.

மதுரையில் இன்று அமமுக கட்சியின் சார்பில் மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய டிடிவி தினகரன், ‘கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி, ஒசூர் வரைக்கும் 234 தொகுதியிலும் அமமுகவுக்கு கட்டமைப்பு உருவாக்கியுள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த தலைமைப்பதவியை ஏலம்போட்டு நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆர்.கே நகர் தேர்தல் முடிந்த பின் ஜெயலலிதாவின் பெயரில் கட்சியை தொடங்க வேண்டும் என எண்ணினேன. ஜெயலலிதா மறைவிற்கு பின் நடந்தது அம்மாவின் ஆட்சியும் அல்ல, அது கட்சியும் அல்ல. ஜெயலலிதாவின் ஆட்சியை வழிநடத்துவதாக கூறி தவறாக ஆட்சி செய்தார்கள். அதனால் நான் அவர்களை கண்டித்தேன். ஆர்.கே நகர் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. அந்த காலகட்டத்தில் தளவாய்சுந்தரம் போன்றோர் தான் பொதுச்செயலாளர் சின்னம்மாவை சந்தித்து என்னை தேர்தலில் நிற்க வேண்டும் என கூறினார்கள். 

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

அப்போது தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் தலைமைக்கு வந்துவிடுவேன் என்ற பயம் வந்தது. எடப்பாடி அணியினரை ஊழல் செய்யாதீர்கள் என சொன்னேன் ஆனால் அவர்கள் கேட்கவில்லை .அதனால்தான் தனிக்கட்சி்தொடங்க எண்ணினேன். எடப்பாடி அணியினர் செய்த ஊழலுக்கு நாள்தோறும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். 

காக்கிச்சட்டைக்கே அஞ்சும் எடப்பாடி அணியினர் லஞ்ச ஒழிப்புத்துறை என்றால் என்ன ஆவார்கள் என உங்களுக்கே தெரியும். அவர்களுக்கு மடியிலயே டன் கணக்கில் பயம் உள்ளது. பதவியை காப்பாற்ற மட்டுமே உள்ளனர், தொண்டர்களையோ, அம்மாவின் ஆட்சியை காப்பாற்றமாட்டார்கள். வினை விதைத்தவர்கள், வினை அறுப்பான் என்ற நிலையை அனுபவிப்பார்கள். நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பு இல்லை.

அதிமுகவில் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கூட பொதுச்செயலாளாரக முடியும். நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் அவர்களது காலத்திலயே அழிந்துபோவார்கள். பதவி என்பதை எதிர்பார்த்தவர்கள் தான் நம்மிடம் இருந்து ஓடிவிட்டனர். அமமுக ஆட்சிக்கு வந்தால்தான் ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்க முடியும். 5 வருடத்தில் 3 பொதுச்செயலாளரை மாற்றிவிட்டார்கள். 

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

தற்போது அதிமுக தொண்டர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிமுகவை மீட்டெடுப்பவர்கள் அமமுகவினர் தான். அதிமுகவின் சண்டையை நாம் கண்டுகொள்ளவேண்டாம். நமது சின்னம் குக்கரையும், அமமுகவின் கொடியையும் பட்டி தொட்டி எங்கும் எடுத்துசெல்ல வேண்டும். உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிர படுத்த வேண்டும். 

அம்மாவின் உண்மையான இயக்கம் அமமுக தான். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என நான் எண்ணுகிறேன். ஒன்றிய அளவில் சரியான நிர்வாகிகளை அணிவாரியாக நியமனம் செய்யுங்கள். ஆகஸ்ட் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு, செயற்குழு நடைபெறவுள்ளது. அதிமுகவை மீட்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..உண்மையான அதிமுக எடப்பாடி தான்.. மகிழ்ச்சியில் இருந்த இபிஎஸ் தரப்புக்கு 'ஓபிஎஸ்' கொடுத்த ட்விஸ்ட் !