Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகளை ஏமாற்றும் திமுக.. தேர்தல் வாக்குறுதி என்னாச்சு.? டென்ஷனான டிடிவி தினகரன் !

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தும் என தேர்தல் நேரத்தில் மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார் டி.டி.வி தினகரன்.

Ammk Secretary ttv dhinakran against dmk govt
Author
First Published Dec 30, 2022, 8:35 PM IST

அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ. 100 கோடிக்கும் மேல் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்காத நிலையில் விவசாயிகளை ஏமாற்றி வேறொரு நிறுவனத்திற்கு ஆலையை கைமாற்றும் முயற்சி கண்டனத்துக்கு உரியது.

Ammk Secretary ttv dhinakran against dmk govt

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்தும் என தேர்தல் நேரத்தில் மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இப்போது ஆளும்கட்சியை சேர்ந்த ஒருவரின் பின்னணியோடு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை கொடுக்காமல் ஏமாற்றி ஆலையை அவர்கள் வசம் எடுத்து கொள்ள இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க..New Year 2023 : ஆங்கில புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக கொண்டாட.. சூப்பரான 5 கோவில்கள்..!

Ammk Secretary ttv dhinakran against dmk govt

விவசாயிகளை கடனில் சிக்க வைத்திருப்பதுடன் அவர்கள் ஆலைக்கு அளித்த கரும்புக்கான தொகையையும் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை மீறி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் நடந்து கொள்கிறது. இது குறித்து தி.மு.க அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே இந்த பிரச்சினையில் உண்மை என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஏற்கனவே ஒப்புகொண்டபடி நிலுவை தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.. திமுக ஒரு குடும்ப கட்சி.. தமிழ்நாடு பாதுகாப்பான கைகளில் இல்லை! - திமுகவை வெளுத்து வாங்கிய ஜே.பி நட்டா

Follow Us:
Download App:
  • android
  • ios