டி.டி.வி.தினகரனின் வலதுகரம், அமமுக தென்மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜாவின் அண்ணன் மகன் நாகராஜன் திமுகவில் இணைந்தது அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அமமுகவில் இருந்து முக்கியப்புள்ளிகள் பலரும் விலகி மாற்ருக் கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், அமமுக தேர்தல் பிரிவு செயலாளராக நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்ட  கடம்பூர் இளைய ஜமீன் மாணிக்கராஜாவின் அண்ணன் மகன் நாகராஜன் திமுகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

அமமுக தென் மண்டல பொறுப்பாளராக இருந்தவர் மாணிக்க ராஜா. டி.டி.வி.தினகரனின் வலதுகரமாக இருப்பவர். பலரும் கட்சியை விட்டுப்போனாலும் என்னுடைய உண்மையான தென் மண்டல தளபதி மாணிக்கராஜா மட்டும்தான் என டி.டி.வி.தினகரன் வெளிப்படையாக வாய் விட்டு புகழும் அளவுக்கு நம்பிக்கையை பெற்றவர்.  

டி.டி.வி.தினகரனுக்கு மட்டுமல்ல. சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அவர்களது குடும்பத்தினருக்கு நெருக்கமானவர். ஷெரினா மீது கஞ்சா வழக்கு பாய்ந்த போது அவ்ருக்காக ஜாமின் வழங்கியதே இந்த மாணிக்க ராஜா தான். திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குடியில் உள்ள காட்டு பங்களாவில் தான் நடராஜன் வந்து தங்குவார். ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக டி.டி.வி.தினகரன், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காட்டு பங்களாவுக்கு ரகசிய ஜாலி விசிட் சென்று வருகிறார்.

அப்படி முக்கியத்துவம் வாய்ந்த மாணிக்க ராஜாவின் அண்ணன் மகனே திமுகவில் இணைந்திருப்பது அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.