டி.டி.வி.தினகரன் அமமுகவில் முக்குலத்தோர் சமூகத்தினருக்கு மட்டுமே பொறுப்பு கொடுப்பதாகவும், பிற சமூகத்தினரை மதிப்பதே இல்லை என்றும் அக்கட்சியில் உள்ள தென்சென்னை மாவட்ட கழக துணை செயலாளர் வைத்தி கடுமையாக சாடியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், தென்சென்னையில் இசக்கி சுப்பையாவை வேட்பாளராக அறிவிச்சு இருக்கீங்க. அவருக்கும் தென்சென்னைக்கும் என்ன சம்பந்தம்? அமமுக சாதிக்கட்சியா மாறிடுச்சு. அம்மா தேவர் முன்னேற்ற கழகமாக மாறிடுச்சு. என்னைப்போன்ற வன்னியர்களை எல்லாம் இந்தக் கட்சி புறக்கிறது. டி.டி.விக்கு சாதி வெறி இருப்பது எங்களுக்கும் தெரியும். இருந்தாலும் அதிமுகவில் இருந்து வந்தவர். தலைமை பதவிக்கு வந்துவிட்டார். ஆகையால் ஒருங்கிணைத்து போவார் என எதிர்பார்த்தோம். ஆனால், அவர் அப்படி இல்லை. அமமுகவில் 69 சதவிகிதம் பேர் முக்குலத்தை சேர்ந்தவர்கள் தான்.

சாதிகட்சி தலைவராக இருப்பதற்கு தான் டி.டி.விக்கு அருகதை இருக்கிறது. டி.டி.வி 10 பைசா கூட செலவு பண்ணமாட்டாரு. செந்திபாலாஜி கட்சிக்கு செலவு பண்ண முடியாமல்தான் ஓடிவிட்டார். சரி செலவு பண்ணத்தேவையில்லை குறந்த பட்சம் மரியாதையாவது கொடுங்கள். வெற்றிவேல் ஒரு சாதாரண கவுன்சிலர். அம்மாவே அவரை பலமுறை குண்டாஸில் தூக்கி உள்ளே போட்டுவிடுவேன் என திட்டியிருக்கிறார். 

அப்படிப்பட்ட வெற்றிவேல் கட்சி நடத்தி அவருக்கு கீழ் நாங்கள் இருக்க தயாராக இல்லை. கலைராஜன் காசு இல்லாமல் எதையுமே செய்யமாட்டார். அவருக்கு காசு தான் கடவுள். ஆனால் இவரது சாதிக்காரன் என்பதால் தஞ்சாவூரில் இருந்து வந்து இங்கே பொறுப்பு கொடுத்து தென் சென்னையில் இருந்த ஆதிராஜாராமை பகைத்துக் கொண்டார். சேகர் பாவை பகைச்சுக்கிட்டார் டி.டி.வி.தினகரன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.