பொதுவாக சிறை தண்டனை என்பதே இயல்பான நம்முடைய வாழ்க்கையில் இருந்து நம்மை பிரித்து வைத்து தண்டனை வழங்குவது தான். சிறை தண்டனைகளின் தன்மை அவரவர் செய்த குற்றத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும். அவ்வாறு சிறையில் இருக்கும் காலத்தில் பொது விஷயங்கல் குறித்து அதிகமாக அறிந்து கொள்ள முடியாது தான் ஆனால் செய்தி தாள்கள்  போன்ற சில விஷயங்களில், சிலருக்கு மட்டும் விதிவிலக்குகள் உண்டு இந்த விஷயத்தில் .

சொத்துகுவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சசிகலா நாட்டு நடப்பை அறிந்து கொள்ள் தற்போது தொலைக்காட்சிகளை தான் அதிகமாக பார்க்கிறாராம். அவர் இப்போது இருக்கும் பரப்பன அக்ரஹாரக சிறையில் இருந்த படி நாட்டு நடப்பை அறிந்து கொள்ள அவருக்கு பேப்பர் படிக்க அனுமதி இருந்திருக்கிறது. ஆனால் தற்போது அவர் அங்கு வைத்து பேப்பர் எல்லாம் படிப்பதை விட அதிக ஆர்வம் காட்டுவது டிவி பார்ப்பதற்கு தானாம்.

சிறையில் இருக்கும் தொலைக்காட்சியை பார்க்க அவருக்கு சிறிது நேரம் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது .இதனால் அங்கு இருக்கும் தொலைக்காட்சியிலேயே செய்திகளை பார்த்து கொள்கிறாராம். இதற்கு முன்பு தூர்தர்ஷன் சேனல் மட்டுமே அங்கு ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வேறு சில சேனல்களும் ஒளிபரப்பபடுவதால் அவருக்கு இன்னும் வசதியாகி இருக்கிறது.

சில மணி நேரத்தை அங்கு செலவிடும் சசிகலா தற்போதெல்லாம் அதிகமாக கடிதங்கள் எழுத ஆரம்பித்திருக்கிறாராம். அதிமுக நிர்வாகிகள் , தினகரன், ஜெயா டிவி என ஒவ்வொருவருக்கும் அவரது கடிதங்கள் சென்று கொண்டிருக்கிறதாம்.

சசிகலா எழுதும் இந்த கடிதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனாவாக கருதப்படுகின்றன. இதனால் அதிமுக நிர்வாகிகள் இந்த கடிதங்களை பொக்கிஷமாக பாதுகாத்துவருகின்றனராம். மேலும் சசிகலா எழுதும் இந்த கடிதங்களை கட்சி இதழான நமது எம்ஜிஆர்-ல் வெளியிட சிறைவிதிகளில் இடம் இருக்கிறாதா என்றும் முயற்சித்து வருகின்றனராம்