தீவிர சிகிச்சையில் அமமுக வேட்பாளர்... வேறு வழியில்லாமல் களத்தில் குதித்த மகன்..!

மன்னார்குடி வேட்பாளர் எஸ்.காமராஜ் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  அவரது மகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

AMMK candidate Intensive treatment...election campaign kamaraj son

மன்னார்குடி வேட்பாளர் எஸ்.காமராஜ் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  அவரது மகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் களத்தில் இல்லாமல் வாக்கு சேகரிப்புகள் நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பொன்ராஜ் மற்றும் சந்தோஷ்பாபு ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. டிஆர்பி.ராஜாவும், அதிமுக வேட்பாளராக சிவாராஜமாணிக்கமும், அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

AMMK candidate Intensive treatment...election campaign kamaraj son

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ்க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, தஞ்சையில் உள்ள  மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு பரிசோதனை செய்ததில் 4 இடங்களில் அடைப்புகள் இருப்பது கணடுபிடிக்கப்பட்டது. உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை மூலம் அடைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் சில நாட்களில் எஸ்.காமராஜ் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் வீடு திரும்பினாலும் முழு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

AMMK candidate Intensive treatment...election campaign kamaraj son

இந்நிலையில், தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகன் ஜெயேந்திரன் தேர்தல் பரப்புரை செய்ய முடிவு செய்தார். அதை தொடர்ந்து தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவரது மகன் பரப்புரையில் ஈடுட்டது அமமுகவினர் இடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios