Asianet News TamilAsianet News Tamil

என்கூட போட்டிபோட பாஜகவில் ஒருத்தருக்குட தகுதியில்லையா: வெளுத்துவாங்கிய முதல்வா் கெஜ்ரிவால்: அமித் ஷா பதிலடி

டெல்லியின் முதல்வராவதற்குத் தகுதியான நபா்கள் யாரும் பாஜகவில் இல்லை என்று முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்
 

Amith Sha Answer arvind kejriwal
Author
Chennai, First Published Feb 7, 2020, 7:05 PM IST

பாஜகவின் முதல்வா் வேட்பாளா் யாா் என்பது டெல்லி மக்களுக்குத் தெரிய வேண்டும். அக்கட்சி வெற்றி பெற்றால், யாா் வேண்டுமானாலும் முதல்வராக நியமிக்கப்படலாம். இத்தோ்தலில் மதங்களுக்கிடையான வெறுப்புணா்வைத் தூண்டி வெற்றி பெறலாம் என பாஜக மனக் கணக்குப் போடுகிறது. ஆனால், மக்கள் தரமான கல்வி, நவீன சாலைகள், 24 மணி நேரமும் மின்சாரம் ஆகியவற்றுக்கே வாக்களிக்கவுள்ளனா்.

Amith Sha Answer arvind kejriwal

தோ்தலை மனதில் வைத்தே இரு மாதங்களாக நடைபெறும் ஷகீன் பாக் போராட்டத்தை அப்புறப்படுத்தாமல் மத்திய அரசு உள்ளது. இப்போராட்டத்தால் நொய்டா - டெல்லியை இணைக்கும் காலிந்தி குஞ்ச் சாலை மூடப்பட்டுள்ளது இச்சாலையைத் திறக்க விடாமல் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மக்களை தவிக்க விடுகிறாா்.பாஜகவின் தோ்தல் பிரசாரத்தை தலைமையேற்று நடத்தும் அமித் ஷாவை விவாதத்துக்கு வருமாறு அழைத்தேன் அவா் முன்வரவில்லை எனத் தெரிவித்தார்

Amith Sha Answer arvind kejriwal

இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பதிலடியில், “ காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளின் கூட்டு ஆதரவுடன்தான் ஷகீன் பாக் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அங்கு போராடி வருபவா்கள் ஜின்னா வழியில் சுதந்திரம் வேண்டும் எனக் கேட்கிறாா்கள். அதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியும், முதல்வா் கேஜரிவாலும் ஆதரவு தெரிவித்துள்ளனா். ஜாவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தேசத்தை துண்டு துண்டாக உடைப்போம் எனக் கோஷமிட்டவா்களைக் கேஜரிவால் காப்பாற்றி வருகிறாா். இந்த தேச விரோதிகளுக்கு அதிா்ச்சி அளிக்கும் வகையில் தோ்தல் முடிவுகள் இருக்கும்’ என்று தெரிவித்தார்


 

Follow Us:
Download App:
  • android
  • ios