Asianet News TamilAsianet News Tamil

நாட்டின் ஒரே மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டும்... அமித் ஷா அதிரடி..!

இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். 

amit shah says hindi should be one language of the india
Author
India, First Published Sep 14, 2019, 11:06 AM IST

இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். amit shah says hindi should be one language of the india

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமித்ஷா, “இந்தி நாளான இன்று, நமது நாட்டின் அனைத்து குடிமக்களும் நமது தாய் மொழியை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும். காந்தி, இறும்பு மனிதர் சர்தார் படேலின் கனவுகளான ஒரு நாடு, ஒரு மொழி கனவுக்கு இந்தியைப் பயன்படுத்தவோம்.

amit shah says hindi should be one language of the india

இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. ஆனால் மொத்த நாட்டுக்கு ஒரே மொழி இருக்க வேண்டியது அவசியம். அதுவே உலகில் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டும். ஒரு மொழி, மொத்த நாட்டையும் ஒற்றுமையாக வைக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்.

அவரவர் தாய்மொழியிலேயே பேசும் போதும் மக்கள் தங்கள் மொழியுடன் இந்தியையும் பழக வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் தான் முடியும். இந்தியை அடிக்கடி பயன்படுத்தும்படி மக்களை அவர் கேட்டுக் கொண்டார். மேலும், 'ஒரே தேசம், ஒரே மொழி' என்ற மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேலின் கனவை நிறைவேற்றுவதில் பங்களிப்பு செய்யுங்கள்'' என கூறி உள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios