மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். ரூ. 61.843 கோடி மதிப்பீட்டில் சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், கோவை - அவிநாசி சாலையில் ரூ.1,620 உயர்மட்ட சாலை திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன்,  திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார் அமித்ஷா. 

சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், கலைவாணர் அரங்கில் நடந்த அரசு விழாவில் அமித் ஷா கலந்துகொண்டார்.

அந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி அமித் ஷாவுக்கு பொன்னாடை போற்றினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நினைவுப்பரிசு வழங்கினர். கலைவாணர் அரங்கில் இருந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு செருப்பை கழட்டிவிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார் அமித் ஷா. அதன்பின்னர் அவரைத்தொடர்ந்து வந்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களும் செருப்பை கழட்டிவிட்டு மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் புகைப்படங்களுக்கு செருப்பை கழட்டிவிட்டு அமித் ஷா மரியாதை செலுத்திய சம்பவம், அதிமுகவினர் மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர்களை கடந்து பொதுமக்கள் மத்தியிலும், அமித் ஷாவின் மரியாதை கொடுக்கும் அந்த பண்பு பெரும் வரவேற்பை பெற்றதுடன், அவர் மீதான மதிப்பையும் அதிகரித்துள்ளது.