amit shah gave freedom to yeddyurappa to take final decision

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என உறுதியாக தெரிந்துவிட்டால், முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இறுதி முடிவை எடியூரப்பாவே எடுக்க பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாமல் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டசபை கூடி நடந்துவருகிறது.

ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை உறுதியாக கிடைக்கவில்லை என்றால், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், எந்த முடிவாக இருந்தாலும் எடியூரப்பாவே எடுக்கலாம் என அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து மாநில தேர்தல்களையும் முன்னின்று வழிநடத்தும் மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்கும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, இறுதி முடிவை எடியூரப்பாவே எடுக்கட்டும் என அறிவுறுத்தியதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.