Asianet News TamilAsianet News Tamil

அர்னாப் கைதுக்கு அமித்ஷா கண்டனம்..!! ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என ஆவேசம்..!!

 அர்னாப்க்கு எதிராக மாநில அரசு  அதிகாரத்தை அப்பட்டமாக தவறாக பயன்படுத்தி உள்ளது இது தனி மனித சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீதான தாக்குதல் இந்த செயல் அவசர நிலையை நமக்கு நினைவூட்டுகிறது

Amit Shah condemns Arnab's arrest Anger as an attack on media freedom.
Author
Delhi, First Published Nov 4, 2020, 12:26 PM IST

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை  செய்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்  அர்னாப்பை கைது செய்திருப்பது ஊடக சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறை, இதை நாம் எதிர்த்தே ஆகவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஆர்க்கிடெக்ட் ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக  ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். அன்வாய் நாயக் என்ற ஆர்க்கிடெக்ட் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதத்தில் எழுதி வைத்திருந்தார். அதில் தனது மரணத்திற்கு காரணம் என ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். எனவே ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

Amit Shah condemns Arnab's arrest Anger as an attack on media freedom.

இதையடுத்து மும்பை போலீசார் அவரை இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். முன்னதாக இன்று காலை 10க்கும் மேற்பட்ட போலீசார் அர்னாப் வீட்டுக்கு விரைந்தனர். அவர்களுடன் அர்னாப் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து இழுத்து கைது செய்து வாகனத்தில் ஏற்றியதாக கூறப்படுகிறது. போலீசார் தன்னை தாக்கியதாக அர்னாப் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அர்னாப் கூறுவது உண்மையில்லை என போலீசார் மறுத்துள்ளனர். பிரபல ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருப்பது நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அர்னாப் கைது செய்யப்பட்டதற்கான காட்சிகளை ரிபப்ளிக் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. அர்னாப் கைது செய்யப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

Amit Shah condemns Arnab's arrest Anger as an attack on media freedom.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் காங்கிரசும் அதன்  கூட்டணிக் கட்சிகளும் மீண்டுமொருமுறை ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கின்றன. ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப்க்கு எதிராக மாநில அரசு  அதிகாரத்தை அப்பட்டமாக தவறாக பயன்படுத்தி உள்ளது இது தனி மனித சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீதான தாக்குதல் இந்த செயல் அவசர நிலையை நமக்கு நினைவூட்டுகிறது பத்திரிகை சுதந்திரத்திற்கு மீதான இந்த தாக்குதலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும் எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios