காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய மாநில அரசுக்கு எதிராக  ஸ்டாலின் தலைமையில் நடந்த முழு அடைப்புப் போராட்டம் அபார வெற்றி பெற்றது. இந்த போராட்டத்தில் சிறப்பு என்னவென்றால் நேற்று கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட மண்டபத்தில் ஒரு ஜோடிக்கு ஸ்டாலின் திருமணம் செய்துவைத்தார். அதேபோல ஒட்டுமொத்த எதிர்கட்சி தலைவர்களை கவனிக்க வைத்தது  ஆம்பூர் தெய்வநாயகி.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் எதிரில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் தெய்வநாயகி என்ற திமுக தொண்டர் கையில் திமுக கொடியோடு தனி ஒருவராய் நின்று, வேலூரில் இருந்து திருப்பத்தூர் சென்ற அரசுப் பேருந்தை மறித்தார். இந்த புகைப்படம் யாரோ ஒருவர் எடுத்து திமுக வாட்ஸ் அப் களிலும் பேஸ்புக்கிலும் பதிவிட அந்த புகைப்படம் தீயாக வலம் வந்தது.

அந்த போராட்டத்தின்போது காவிரிக்காக இன்று பேருந்தை இயக்க கூடாது என்று டிரைவரிடம் தெய்வ நாயகி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். டிரைவரை நோக்கி, ‘பயணிகளை இறக்கிவிட்டுட்டு நீயும் இறங்கி வா’ என்று போராட்டத்துக்கு அழைத்தார். பிறகு போலீஸார் வந்து தெய்வநாயகியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் பேருந்து புறப்பட்டது. இது வீடியோ காட்சியாகவும் பரவியது.

இந்த வீடியோவை கைதாகி இருந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்து வியந்தார். உடனடியாக வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு அந்த பெண் தொண்டரை தான் சந்திக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து இன்று காலை மு.க.ஸ்டாலினை சந்திக்க பெண் தொண்டர் தெய்வநாயகி சென்னைக்கு வந்து திமுக செய்யல தலைவர் ஸ்டாலினை சந்துத்து வாழ்த்து பெற்றார்.

இதனையடுத்து பேசிய தெய்வநாயகி, நான் 34 ஆண்டாக தி.மு.க.வில் இருக்கிறேன். எனது குடும்பமே தி.மு.க.வில் இருக்கிறோம். தி.மு.க. நடத்தும் எல்லா போராட்டங்களிலும் கலந்து கொள்வேன். 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயத்துக்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நிறைய செய்து உள்ளனர். இலவச மின்சாரம் வழங்கியுள்ளார்.

இதனால் விவசாயிகளுக்கு ஆதரவாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது பஸ்கள் ஓடுவதை பார்த்து அதை மறிக்க கூடாதா என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டேன். பின்னர் தனி ஆளாக சென்று பஸ்சை மறித்தேன். கருணாநிதி, மு.க. ஸ்டாலினை தூரத்தில் நின்று பார்த்து இருக்கிறேன். இப்போது நேரடியாக பார்ப்பது எனக்கு சந்தோ‌ஷமாக இருக்கிறது. மு.க.ஸ்டாலினிடம் தலைவர் கருணாநிதியை பார்த்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அந்த புகைப்படம் எனது பேரக்குழந்தைகள் காலம் காலமாக பார்க்கும்படி இருக்கும் என இவ்வாறு அவர் கூறினார்.