அதிமுக முதல்வர் வேட்பாளராக முதலமைச்சர் பழனிசாமியை ஏற்று கொள்ளும் கட்சியுடனே கூட்டணி என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் கூட்டணி உறுதி செய்யப்படும் என தெரிவித்தார். தற்போது பல கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவில் இருந்து கூட்டணி தற்போது வரை நீடித்து வருவதாகவும் கூறினார்.

தேர்தலுக்கான வியூகம் அமைத்து வருவதாகவும், யார் யார் எந்தெந்த கட்சி என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்த பிறகு அதிமுக தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். எந்த கட்சி அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்றுக்கொள்கிறதோ அந்த கட்சியுடன்தான் கூட்டணி என திட்டவட்டமாக தெரிவித்தார்.