மதுரையில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் பங்கேற்றதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

கடந்த 21 ஆம் தேதி மதுரை ஒத்தக்கடையில் நடிகர் கமலஹாசன் தனது கட்சி பொதுக்கூட்டடத்தை நடத்தினார். அங்கு கட்சியின் கொடியை ஏற்றிவைத்து மக்கள் நீதி மய்யம் என்ற பெயரையும் அறிமுகம் செய்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கோண்டு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் பங்கேற்றதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

மேலும் தமது கட்சி துவக்க விழாவில் பங்கேற்று பொதுக்கூட்டத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் கமல் நன்றி தெரிவித்துள்ளார்.  

தொடக்க விழாவில் பங்கேற்றவர்களுக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள நன்றி கடிதத்தில், மதுரை மாநகர மக்கள், நற்பணி இயக்கத்தினர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், டெல்லி சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பாரதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.